Close Menu
    What's Hot

    Gen Z தலைமுறையை மிரட்டல் மூலம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அமைதிப்படுத்த முடியாது!. ராகுல் காந்தி அட்டாக்!

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் என்ன? தமிழக அரசுக்கு நிதி திரட்ட புதிய முயற்சி!

    டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை விளம்பர பலகை..!! சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘செந்தமிழ்த் தேன்மொழியாள்…’  – பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி மறைவு!
    Featured

    ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்…’  – பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி மறைவு!

    Editor web2By Editor web2July 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Jamuna Rani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் திரையுலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி (88) நேற்று பெங்களூருவில் காலமானார்.

    இனிமை, நளினம், தெளிவான தமிழ் உச்சரிப்பு ஆகியவற்றால் தனக்கென தனி முத்திரை பதித்த அவர், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் உள்ளிட்ட மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் ஜமுனா ராணி.

    ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜமுனா ராணி, சிறுவயதிலேயே திரையுலகில் அறிமுகமானார். தமிழில் ‘கல்யாணி’ திரைப்படம் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமான அவர், டி.எம். சௌந்தரராஜனுடன் இணைந்து பாடிய ‘குலுங்கிடும் பூவில் எல்லாம்’, ‘ஓ தேவதாஸ்’, ‘மாமா மாமா’, ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’, ‘அத்திக்காய் காய் காய்’, ‘ஆதி மனிதன் காதலுக்குப் பின்’, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.

    ‘மகாதேவி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காமுகர் நெஞ்சில் நீதியில்லை’ பாடலை அவரைப் பாடவைக்க கவியரசர் கண்ணதாசன் பிடிவாதமாக வலியுறுத்திய சம்பவம் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்று, ஜமுனா ராணியை முன்னணி பாடகியாக உயர்த்தியது.

    1960-களின் இறுதிக்குப் பிறகு திரைப்படங்களில் அவரது குரல் அரிதாகவே ஒலித்தது. ஆனால், 1987-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை எம்.எஸ். ராஜேஸ்வரியுடன் இணைந்து பாடியதன் மூலம் ஜமுனா ராணி மறக்க முடியாத ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப் பாடல் புதிய தலைமுறைக்கும் அவரது குரலை மீண்டும் அறிமுகப்படுத்தியது.

    தமிழ் திரையிசையில் தேன்குரலால் தனித்த அடையாளம் பதித்த ஜமுனா ராணியின் மறைவு, இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது காலத்தால் அழியாத பாடல்கள் என்றும் ரசிகர்களின் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

    JamunaRani Nayakan PlaybackSinger TamilCinema
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகாராஷ்டிராவில் சோக சம்பவம்: சரிந்த அப்பார்ட்மெண்ட்..!! 8 பேர் பலி..!!
    Next Article தமிழகத்திற்கான 151 மருத்துவ இடங்களை தாரைவார்த்த தவெக அரசின் செயல் வெட்கக்கேடானது!. சீமான் கடும் விமர்சனம்!:
    Editor web2
    • Website

    Related Posts

    Gen Z தலைமுறையை மிரட்டல் மூலம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அமைதிப்படுத்த முடியாது!. ராகுல் காந்தி அட்டாக்!

    July 31, 2026

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் என்ன? தமிழக அரசுக்கு நிதி திரட்ட புதிய முயற்சி!

    July 31, 2026

    டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை விளம்பர பலகை..!! சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு..!!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    Gen Z தலைமுறையை மிரட்டல் மூலம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அமைதிப்படுத்த முடியாது!. ராகுல் காந்தி அட்டாக்!

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் என்ன? தமிழக அரசுக்கு நிதி திரட்ட புதிய முயற்சி!

    டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை விளம்பர பலகை..!! சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு..!!

    காவல் நிலையத்தில் ஆஜர்: 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில்பாலாஜி மனு

    காவிரி உரிமையை காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.