Close Menu
    What's Hot

    ’கர்நாடகா செல்ல முதல்வர் பிடிவாதம் ஏன்… எதை சாதிக்கப் போகிறார்?’- அன்புமணி கேள்வி

    செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்; அடுத்த கட்டம் என்ன?

    கால்பந்து உலகில் பேரதிர்ச்சி!. ஏசி மிலன் ஜாம்பவான் ஃபிராங்கோ பரேசி காலமானார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவிரி உரிமையை காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
    Featured

    காவிரி உரிமையை காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

    Editor web2By Editor web2July 31, 2026Updated:July 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கு முன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த முடிவு எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல், ரூ.75 ஆயிரம் வரை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்திருப்பது விவசாயிகளை ஏமாற்றும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளார்.

    ”இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தேர்தல் வாக்குறுதியின்படி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக திறக்கவில்லை. ஜூலை மாதத்திற்கான நீர் பங்கீட்டிலும் குறைபாடு உள்ளது.

    காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்தாலும், கர்நாடக அரசு அதனை ஏற்க மறுத்துள்ள சூழலில் தமிழக முதலமைச்சர் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

    மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதில் கடுமையான பாதிப்பு ஏற்படும். சுமார் 20 மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன நெருக்கடி உருவாகும். எனவே, கர்நாடகா பயணத்திற்கு முன் அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி ஒருமித்த முடிவு எடுக்க வேண்டும்.

    மேலும், கர்நாடக முதலமைச்சர் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ஏற்க மறுத்துள்ளதையும், மேகதாது விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அளித்த பதிலையும் தமிழக அரசு கண்டிக்காமல் மவுனமாக இருப்பது ஏற்க முடியாதது” என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

    CauveryIssue EdappadiPalaniswami FarmLoanWaiver TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘மின் கட்டண உயர்வு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
    Next Article காவல் நிலையத்தில் ஆஜர்: 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில்பாலாஜி மனு
    Editor web2
    • Website

    Related Posts

    ’கர்நாடகா செல்ல முதல்வர் பிடிவாதம் ஏன்… எதை சாதிக்கப் போகிறார்?’- அன்புமணி கேள்வி

    July 31, 2026

    செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்; அடுத்த கட்டம் என்ன?

    July 31, 2026

    கால்பந்து உலகில் பேரதிர்ச்சி!. ஏசி மிலன் ஜாம்பவான் ஃபிராங்கோ பரேசி காலமானார்!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’கர்நாடகா செல்ல முதல்வர் பிடிவாதம் ஏன்… எதை சாதிக்கப் போகிறார்?’- அன்புமணி கேள்வி

    செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்; அடுத்த கட்டம் என்ன?

    கால்பந்து உலகில் பேரதிர்ச்சி!. ஏசி மிலன் ஜாம்பவான் ஃபிராங்கோ பரேசி காலமானார்!

    உண்டியல்களில் பணம் போட்ட ராகுல் காந்தி.. நாடாளுமன்ற வளாகத்தில் நூதன போராட்டம்..!!

    அமளி ஓயாததால் பாராளுமன்றம் முடக்கம்; ஆகஸ்ட் 3 வரை ஒத்திவைக்கப்பட்ட இரு அவைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.