Close Menu
    What's Hot

    காவல் நிலையத்தில் ஆஜர்: 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில்பாலாஜி மனு

    காவிரி உரிமையை காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

    ‘மின் கட்டண உயர்வு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவிரி, மேகதாது அணை விவகாரம்:அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!
    Featured

    காவிரி, மேகதாது அணை விவகாரம்:அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!

    Editor web2By Editor web2July 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 cm vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நதிநீர்ப் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்துச் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

    தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்ட போதிலும், கர்நாடக அரசு அதனைச் செயல்படுத்தாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்தச் சூழலில், காவிரி மற்றும் மேகதாது விவகாரத்திற்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியாக, முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு நேரில் சென்று அம்மாநில நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பிற்குத் தமிழ்நாட்டின் விவசாயச் சங்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட அமைப்புகள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

    இதனையடுத்து இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமைச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் காவிரியிலிருந்து உரிய நீரைப் பெறுவது, மேகதாது அணை திட்டத்திற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் முக்கிய முடிவுகள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    CauveryIssue cmvijay MekedatuDam TamilNaduNews
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்திற்கான 151 மருத்துவ இடங்களை தாரைவார்த்த தவெக அரசின் செயல் வெட்கக்கேடானது!. சீமான் கடும் விமர்சனம்!:
    Next Article முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு!. திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு திங்கட்கிழமை விசாரணை!
    Editor web2
    • Website

    Related Posts

    காவல் நிலையத்தில் ஆஜர்: 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில்பாலாஜி மனு

    July 31, 2026

    காவிரி உரிமையை காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

    July 31, 2026

    ‘மின் கட்டண உயர்வு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவல் நிலையத்தில் ஆஜர்: 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில்பாலாஜி மனு

    காவிரி உரிமையை காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

    ‘மின் கட்டண உயர்வு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

    நில அளவீட்டின்போது மோதல்!. பெண்ணை தாக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்!. மேட்டூரில் அதிர்ச்சி!

    மாற்றப்படுகிறதா தாயுமானவர் திட்டம் பெயர்..?? அடுத்த அதிரடியில் இறங்கும் தவெக அரசு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.