Author: Editor web2
புதுடெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் மத்திய அரசின் கல்விக் கொள்கையை கடுமையாக விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜுக்கு, பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் கடந்த வாரம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் கல்விக் கொள்கை மற்றும் மாணவர்களை பாதிக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸுக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி தலைவர்களான ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரின் படங்களுடன் கரப்பான்பூச்சி உருவங்கள் இடம்பெற்ற விளம்பர பலகைகளில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. யஷ்பால் சுவர்ணா, நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகர்களின் மனதில்…
நாடு முழுவதும் போட்டித் தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க கொண்டு வரப்பட்ட பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா – 2026, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதன் மூலம் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் சட்டத்துக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கட்டமாக இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த ஜூலை 27-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தினார். அண்மையில் நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சர்ச்சைகளுக்குப் பிறகு இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. புதிய திருத்தங்களின்படி, தேர்வு வினாத்தாள்களை கசியவிடுதல் அல்லது அதற்கு உடந்தையாக செயல்படுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், திட்டமிட்டு செயல்படும் வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு…
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளின் ஒரு பகுதியாக, போரூர் முதல் பூந்தமல்லி நசரத்பேட்டை வரை நிறைவடைந்துள்ள மெட்ரோ ரயில் பாதையை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, போரூரில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயிலில் பயணித்த அவர், திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். ஆய்வின் போது மெட்ரோ ரயில் நிலையங்கள், பயணிகள் பாதுகாப்பு வசதிகள், நடைமேடைகள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும், பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில்நுட்ப பணிகள் மற்றும் இறுதிக்கட்ட சோதனை நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர தேவையான பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் பூந்தமல்லி பகுதியில் மெட்ரோ ரயிலில் இருந்து இறங்கிய முதலமைச்சர் விஜயை காண ஏராளமான…
புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் அருகே உள்ள ஒடுகம்பட்டி குடும்பம் கொழிஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு–2026 இன்று உற்சாகமாக நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் பங்கேற்றனர். இயற்கை விவசாயத்தின் அவசியம், அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள், மண் வளத்தை பாதுகாக்கும் முறைகள் மற்றும் பாரம்பரிய விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து நிபுணர்கள் விரிவாக விளக்கமளித்தனர். அன்றாட வாழ்வில் ஏற்படும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு மூலிகைச் செடிகளின் பயன்பாடு, இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பான உணவு உற்பத்தியின் அவசியம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மாநாட்டில் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுவதன் அவசியம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் மரவகைகள் மற்றும் அவற்றை நடுவதற்கான சரியான இடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பாரம்பரிய நெல்…
புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய ஜனாதிபதியின் ‘கலர்ஸ்’ (President’s Colours) விருதை வழங்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதுச்சேரி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, அர்ப்பணிப்புமிக்க சேவை மற்றும் தன்னலமற்ற தியாகத்தைப் பாராட்டும் வகையில், இந்திய ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவமான ஜனாதிபதியின் ‘கலர்ஸ்’ விருது புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருது, பாதுகாப்புப் படையினருக்கான மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விருதை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஜூலை 25-ஆம் தேதி புதுச்சேரி வர திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் டெல்லியில் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஆகஸ்ட் முதல் வாரத்தில் அவர் புதுச்சேரி வருவார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், புதுச்சேரி…
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலம் தொடர்பான முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் இணைத்து விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. பழனியைச் சேர்ந்த அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார் தாக்கல் செய்த மனுவில், பழனி மடத்துக்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்கு டோக்கன் வழங்க அனுமதி அளித்த அதிகாரி பதிவு நடைபெற்ற நாளில் விடுப்பில் இருந்ததாகவும், அலுவலக உதவியாளரும் அன்றைய தினம் பணியில் இல்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொடைக்கானல் சார் பதிவாளர் ஆவண எண்ணை ஒதுக்கி பத்திரப்பதிவை மேற்கொண்டதாகவும், இதில் பல அதிகாரிகள் தொடர்புடையிருக்க வாய்ப்புள்ளதால் முழுமையான விசாரணை அவசியம் என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். எனவே, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மட நில பத்திரப்பதிவு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அவர்…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் தந்தை மற்றும் மகனை கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நாகமுத்து மற்றும் அவரது மகன் மணி ஆகியோர் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் (Second Sales) கடை நடத்தி வருகின்றனர். இன்று வழக்கம்போல் இருவரும் கடையில் இருந்தபோது, மணி மற்றும் கார்த்தி என்பவருக்கிடையே இருந்து வந்த முன்விரோதம் தொடர்பாக கார்த்தி நேரடியாக கடைக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த கார்த்தி, நாகமுத்து மற்றும் மணியை சரமாரியாக வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த மணி உயிர் தப்ப ஓடியபோதும், அவரை விரட்டிச் சென்ற…
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்றங்கள் மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரு காவலர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றச்செயலில் ஈடுபடுவது மீண்டும் நடைபெறாத வகையில், இரவு ரோந்து பணிகளை ஆண்டுதோறும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் டிஜிபிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை தேவையின்றி ஒத்திவைக்கக் கூடாது என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப…
சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று களத்தில் இறங்கி நேரில் ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) தலைமை அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் 3 வழித்தடங்களில் நடைபெற்று வரும் பணிகள், சுரங்கப் பாதை அமைக்கும் நிலவரம் மற்றும் கட்டுமான இலக்குகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டி – கத்திப்பாரா சந்திப்பில் ‘பேலன்ஸ்டு கேண்டிலீவர்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தரையிலிருந்து 101 அடி உயரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் மேம்பால கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டார். முதல் கட்ட மெட்ரோ பாதை மற்றும் கத்திப்பாரா…
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையுடன், கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (FOCIA) நிர்வாகிகள் தமிழக முதலமைச்சரை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கோரிக்கை மனுவை வழங்கினர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் ஜேம்ஸ், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளின் சார்பில் மின்சார நிலைக்கட்டண உயர்வு, பழைய வாட் வரி அபராதம், ஜி.எஸ்.டி. வரிச்சுமை, மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்ததாக தெரிவித்தார். குறிப்பாக, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின்சார நிலைக்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், 12 கிலோவாட்டிற்குக் குறைவான மின் இணைப்புகளை அரசாணையின்படி LT-3A-1 பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறினார். மேலும், 18 கிலோவாட்டிற்குக் குறைவான மின் இணைப்புகளுக்கு மீண்டும் பவர்…