Author: Editor web2

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு  விளக்கமளித்துள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர்-கள் மட்டுமே திரும்பப் பெறப்படும் என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடரும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, போராட்டத்தைக் கைவிட எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டிய ‘காக்ரோச் ஜனதா கட்சி’ , வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்குவோம் என எச்சரித்திருந்தது. இதற்கிடையே, மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல், கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு உதவ ‘சாட்சி’ (SAAKSHI) என்ற ஆன்லைன் தளத்தையும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சட்ட உதவி நிதியையும் அறிவித்துள்ளார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர்கள், அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை…

Read More

கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2025-ஆம் ஆண்டுக்கான ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், டிராட்ஸ்கி மருது நேர்த்தியான கோட்டோவியராக மட்டுமல்லாமல், அனிமேஷன் மற்றும் கணினி வரைகலை போன்ற நவீன கலைத் துறைகளிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருபவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது திறமையைப் பயன்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு அவரை தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக திராவிட மாடல் அரசில் நியமித்ததாகவும், 2023-ஆம் ஆண்டு தமிழக அரசின் செய்தித்துறை வெளியிட்ட இலக்கிய மலரிலும் அவரது பங்களிப்பு இடம்பெற்றதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மன்னர்கள் உண்மையில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் காட்சிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘வாளோர் ஆடும் அமலை’ போன்ற படைப்புகள் மூலம், தமிழர் வரலாற்றைப் பற்றிய தவறான புரிதல்களை…

Read More

உலகின் எதிர்கால எரிசக்தி தேவைக்கு தீர்வாக கருதப்படும் அணு இணைவு (Nuclear Fusion) தொழில்நுட்பத்தில் சீனா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. “செயற்கை சூரியன்” (Artificial Sun) திட்டத்திற்காக உலகின் மிகப்பெரிய சூப்பர் கண்டக்டிங் ஃபியூஷன் காந்தத்தை வெற்றிகரமாக உருவாக்கி சோதனை செய்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. 2 செயற்கை சூரியன் என்றால் என்ன? சூரியன் தினமும் ஒளியையும் வெப்பத்தையும் வெளியிடுவதற்குக் காரணம் அதன் மையத்தில் தொடர்ந்து நடைபெறும் அணு இணைவு செயல்முறையாகும். இதில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஹீலியமாக மாறும்போது அளவிட முடியாத அளவிலான ஆற்றல் வெளிப்படுகிறது. இதே செயல்முறையை பூமியில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் உருவாக்கும் முயற்சிதான் “செயற்கை சூரியன்” திட்டம். இந்த தொழில்நுட்பம் வெற்றியடைந்தால், நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களின் தேவையை வெகுவாகக் குறைக்க முடியும். மேலும், கார்பன் டைஆக்சைடு வெளியேற்றம் இல்லாததால் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.…

Read More

மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கர்நாடகா, மற்ற மாநிலங்களின் அனுமதி பெற வேண்டும் என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலுக்கு, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் இந்த பதில் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். காவிரி நதிநீர் தமிழ்நாட்டின் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்ட விவசாயத்தின் உயிர்நாடியாகவும் விளங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காவிரி நதிநீர் தொடர்பாக நீண்டகால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பை வழங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தத்தால் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு…

Read More

தவெக எம்.எல்.ஏ.க்களை வளைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட குதிரை பேரம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.  அதே சமயம்  நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி, செந்தில் பாலாஜி தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜராகி வருகிறார். அதன்படி, அவர் நான்காவது நாளாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். அவரது சகோதரர் அசோக் குமார் இந்த வழக்கில் முதல் முறையாக காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.  பின்னர், இருவரையும் விசாரணை அதிகாரிகள் தனித்தனியாகவும், இணைத்தும் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரித்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 14 பேர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வழக்கில் ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அதுதொடர்பான நிதி பரிவர்த்தனைகள் குறித்தும் போலீசார் விளக்கம் கேட்டதாக…

Read More

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும் எ.வ. வேலு தாக்கல் செய்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு  இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த எ.வ. வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி தனது கட்சிக்காரர் லஞ்ச ஒழிப்புத் துறை முன் ஆஜராகி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்துள்ளதாகவும், எனவே லுக் அவுட் நோட்டீஸை தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் வாதிட்டார்.…

Read More

கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான ஜல்லிக்கற்களை தமிழகத்திலிருந்து தடையின்றி கொண்டு செல்ல அனுமதி வழங்குமாறு, கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு கடந்த ஜூலை 9-ஆம் தேதி வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான ஜல்லிக்கற்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் போக்குவரத்துக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் ஜல்லிக்கற்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்று வரும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான தரமான ஜல்லிக்கற்கள் அங்கு போதுமான அளவில் கிடைக்காததால், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்தே பெரும்பாலான கட்டுமானப் பொருட்கள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கட்டுப்பாடுகள் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் முன்னேற்றத்தை பாதித்து, திட்டங்கள் தாமதமடையும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.…

Read More

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கன அடி வீதம் காவிரி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசிற்குப் பரிந்துரை செய்து காவிரி ஒழுங்காற்றுக் குழு (CWRC) உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது, கர்நாடகாவில் உள்ள காவிரி பாசன அணைப் பகுதிகளின் தற்போதைய நீர் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் மழை நிலவரம் மற்றும் வரும் நாட்களில் நிலவக்கூடும் சீதோஷ்ண நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் குறுவை மற்றும் சம்பா சாகுபடித் தேவைகளையும், குடிநீர் தேவைகளையும் கருத்தில் கொண்டு, கர்நாடகா கிருஷ்ணராஜ சாகர் (KRS) மற்றும் கபினி அணைகளில் இருந்து பிலிகுண்டுலு அளவீட்டு மையத்தில்…

Read More

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் களியக்காவிளை பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய கனிம வள லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், இந்தத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று, லாரிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் வகையில் ஊர்வலமாக செல்லப் போவதாக அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதையடுத்து தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், கேரள மாநில எல்லைப் பகுதியிலிருந்து…

Read More

பாஜக மாநில துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று திடீரென வந்ததைத் தொடர்ந்து, அவர் தவெகவில் சேரப்போகிறாரா என்கிற அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.    தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், பல்வேறு பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான பாஜகவின் மாநில துணைத் தலைவரான குஷ்பு தலைமைச் செயலகத்திற்கு வந்து மிக முக்கிய நபரைச் சந்தித்துப் பேசியதாகவும், அது முதல்வர் விஜயாக  இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  இதனை உறுதிப்படுத்தும் விதமாக சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்த குஷ்புவிடம் செய்தியாளர்கள் யாரைச் சந்தித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ஒரு முக்கிய வி.வி.ஐ.பி-யைச் சந்திக்க வந்தேன்” என்று சுருக்கமாகக் கூறினார். அப்போது அவரது வாகனம் வருவதற்குச் சில நிமிடங்கள் தாமதமானதால், அவர் அங்கேயே சிறிது நேரம் நடந்துகொண்டிருந்தது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. குஷ்பு தலைமைச்…

Read More