Author: Editor web2

டெல்லியில் ஜூலை 20 அன்று நடைபெற்ற ‘சம்சத் சலோ’ (பாராளுமன்றத்தை நோக்கிய) போராட்டத்தின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த அதிவிரைவுப் படை (RAF) கையாண்ட ‘ஃபோர்ஸ் கிரேடியன்ட்’ (Force Gradient – சூழ்நிலைக்கு ஏற்ப படிப்படியாகப் பயன்படுத்தப்படும் விசை) முறையானது, நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் பயிற்சிகளுக்கு எதிராக அமைந்திருந்ததாக அந்த அமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கிச் சென்றபோது 3 நபர்களுக்குத் துகள்கள் காயங்கள் (Pellet Gun Injuries) ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உள் ஆய்வில், படைப் பிரிவினரின் செயல்பாட்டில் தீவிரக் குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஜூலை 22 அன்று அதிவிரைவுப் படை ஆய்வாளர் ஜெனரல் (IG) சீமா துந்தியா, டெல்லியில் உள்ள கமாண்டன்ட்களுடன் காணொளி வாயிலாக அவசர ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்: முன்னேற்பாடு மற்றும் தகவல்தொடர்பு பணிகளில் ஈடுபடும் முன் வீரர்களுக்கு முறையான மற்றும் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை.…

Read More

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பஞ்சாப் அரசியலில் கடுமையான புயல் வீசத் தொடங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலக் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் பால்பிர் சிங் ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் நடைபெற்ற ஆட்சேர்ப்புத் தேர்வுகள் மற்றும் 12-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாகக் காங்கிரஸ், பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளம் (SAD) ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மத்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது போல, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் தனது அமைச்சர்களின் ராஜினாமாவைப் பெற வேண்டும் எனப் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங் தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக…

Read More

கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தமிழக அரசு சமர்ப்பித்த திருத்தப்பட்ட திட்ட அறிக்கைகளை  மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அமைச்சகம் அனுப்பியுள்ள அறிக்கையில், பயணிகள் எண்ணிக்கை, பயண நேரச் சேமிப்பு மற்றும் மக்கள் தொகை அளவுகோல் எனத் தமிழக அரசு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) அளித்த விளக்கங்களை ஏற்க இயலாது எனத் தெரிவித்துள்ளது. காரணம் என்ன? 7.5 கி.மீ தூரப் பயணத்தில் மெட்ரோ மூலம் 8 நிமிடங்கள் சேமிக்கப்படும் என்ற CMRL-ன் கணக்கீட்டை நிராகரித்துள்ள அமைச்சகம், நிலையங்களுக்கு நடப்பது மற்றும் காத்திருக்கும் நேரத்தைக் கணக்கிட்டால் நேரச் சேமிப்பு எதுவுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவை மாநகரப் பகுதியில் 15.84 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர் என்றும், 2017 மெட்ரோ ரயில் கொள்கையின்படி தேவைப்படும்…

Read More

நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகளைத் தொடர்ந்து வெடித்துள்ள மாணவர் போராட்டங்களுக்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கி உள்ளார். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்டுள்ள வீட்டு செலவின ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டியுள்ளார். அதில், 2014-15 மற்றும் 2025-26 காலகட்டத்தை ஒப்பிடும்போது, குடும்பங்களின் கல்விச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கல்விக் கட்டணம், தனியார் பயிற்சி மற்றும் டியூஷன் கட்டணம், பாடப்புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடும்பங்கள் பெரும் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருவதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் போன்றவை மாணவர்களின் அதிருப்தியை வெளிப்படுத்திய உடனடி காரணங்களாக இருந்தாலும், கல்வி மீதான அதிகரித்த பொருளாதாரச்…

Read More

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிநீக்க மனு தொடர்பாக, இருதரப்பினரிடமும் கூடுதல் விளக்கம் பெறுவதற்காக நேரில் ஆஜராகுமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தமிழக சட்டமன்றச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றச் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த மே 13, 2026 அன்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த தகுதிநீக்க மனு தொடர்பாக, அதற்கு பதிலளித்த நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் விளக்கங்கள் மீது கூடுதல் தெளிவு தேவைப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் (கட்சி மாறுதல் காரணமாக தகுதியின்மையாக்குதல்) விதிகள் பிரிவு 7(7)-ன் கீழ், பேரவைத் தலைவர் கடந்த ஜூலை 3 அன்று முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் இசக்கி சுப்பையாவையும், ஜூலை 9 அன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்களான சத்தியபாமா, எஸ். ஜெயக்குமார் மற்றும் கே. மரகதம் குமரவேல் ஆகியோரையும் நேரில் அழைத்து விளக்கம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த விளக்கங்கள், தாக்கல்…

Read More

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படும் வரிசை மாற்றப்பட்டதாக எழுந்துள்ள விவகாரத்தில், கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” ஆளுநரின் அறிவுறுத்தல் அச்சம் தருகிறது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மரபுகள் நொறுங்குகின்றன ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திலோ மக்கள் மாளிகையிலோ ஒரு மாநிலத்தின் கல்வி எல்லைக்குட்பட்ட பல்கலைக்கழகத்திலோ முதலில் மாநிலமொழியின் வாழ்த்தும் பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்டு வந்ததே மரபு முதலில் தேசப் பாடலும் பின்னர் தேசிய கீதமும் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட வேண்டும் என்று உரிமை மீறிய வரிசையை அறிவுறுத்துவது பெருமைக்குரியதல்ல”   எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் மூலம் விளக்கம் கோரியுள்ளார். அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாணவர்கள் நியாயமான மற்றும் பொறுப்புணர்வுள்ள கல்வி முறையை வலியுறுத்தி அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, பாதுகாப்புப் படையினர் அதிகப்படியான பலத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள், உயிருக்கு ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் பெல்லட் கன் பயன்படுத்தப்பட்டதாகவும், இதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக, பெண் மாணவிகள் மீதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் மற்றும் ஊடகச் செய்திகளை மேற்கோள்காட்டிய ராகுல்…

Read More

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை இறுதியில் ஏற்க மத்திய அரசு முடிவு செய்ததற்கான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, மாணவர் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து தர்மேந்திர பிரதான் இருமுறை தனது ராஜினாமாவை வழங்க முன்வந்தார். ஆனால், “அமைச்சரின் ராஜினாமா என்பது பொறுப்பிலிருந்து விலகுவது போன்றது; பிரச்சினையை சரிசெய்வதே அரசின் நோக்கம்” என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி அவரது ராஜினாமாவை நிராகரித்ததாக கூறப்படுகிறது. ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற உயர்மட்ட அமைச்சர்கள் கூட்டத்திலும், கல்வித்துறை சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று கூறி, அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதன்பிறகு சூழ்நிலை மாறியது. ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பில் மேலும் ஒரு பெரிய அளவிலான ‘சலோ சன்சாத்’ பேரணியை நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜூலை…

Read More

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DME) அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 13,999 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது. 2026–27 கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி ஜூலை 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால், நீட் தேர்வின் இறுதி மதிப்பெண் பட்டியலை தேசிய தேர்வுகள் முகமை இதுவரை வெளியிடாததால், மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை மாணவர்கள் www.tnmedicalselection.org இணையதளத்தின்…

Read More

காவிரியின் குறுக்கே மேகேதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் தமிழக–கர்நாடக எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தருமபுரி மண்டல நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, இன்று அதிகாலை 4 மணி முதல் பெங்களூரு நோக்கிச் செல்லும் அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. போராட்டம் முடிவடையும் வரை அல்லது புதிய உத்தரவு வரும் வரை தமிழக பேருந்துகள் கர்நாடக மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க தமிழக–கர்நாடக எல்லையான ஜூஜூவாடி, அத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இரு மாநில காவல்துறையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, கர்நாடக அரசுப்…

Read More