Close Menu
    What's Hot

    இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றம்:  ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை… விரைவில் புதிய நியமனம்!

    உலக செஸ்: உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதும் குகேஷ்… தேதி அறிவிப்பு!

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!
    Featured

    கரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!

    Editor web2By Editor web2July 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay job
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய அரசுப் பணியை ரத்து செய்து, அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த  10 -ம் தேதியன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தலுக்கு முந்தைய தனது கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    முன்னதாக இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில்  மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அன்றைய தினம் காலை இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வேலை வழங்க உடனடியாக தடை விதிக்கவில்லை என்றபோதிலும், வழங்கப்படும் வேலை நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது எனக் கூறி இருந்தது.

    இந்த நிலையில்,  இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமனங்கள் செல்லாது எனத் தீர்ப்பளித்ததுடன், அதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், முதலமைச்சர் விஜய் வழங்கிய பணி நியமன ஆணைகளும் இதன் மூலம் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

    வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் வழிகாட்டுதல்கள் இருப்பதாகவும், வயது, கல்வித்தகுதி உள்ளிட்ட விதிமுறைகளின் அடிப்படையிலேயே கரூர் சம்பவத்தில் பணிகள் வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

    மேலும், ஒவ்வொரு துறையிலும் காத்திருப்புப் பட்டியல் நடைமுறையில் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட விதிகளின்படி பின்னரே பணிகள் நிரந்தரம் செய்யப்படும் என்றும், உடனடியாக நிரந்தர அரசுப் பணி வழங்கப்படுவதில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Madurai High court

    இதையடுத்து நீதிமன்றம், தினந்தோறும் சாலை விபத்துகள், தொழிற்சாலை மற்றும் சிவகாசி போன்ற பகுதிகளில் வெடி விபத்துகளில் பலர் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. அத்தகைய அனைத்து சம்பவங்களிலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியது.

    மேலும், அரசுப் பணிக்காக ஆயிரக்கணக்கானோர் போட்டித் தேர்வுகள் மூலம் காத்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அரசுப் பணி வழங்குவது சமத்துவக் கொள்கைக்கு முரணாக அமையக்கூடும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

    பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள், வாழ்வாதார உதவித் திட்டங்கள் மற்றும் பிற நலத்திட்டங்கள் மூலம் உதவுவது சிறந்த மாற்று வழியாக இருக்கும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

    அரசுத் தரப்பு இது சாதாரண பணி நியமனம் மட்டுமே என வாதிட்ட நிலையில், “எந்த அரசுப் பணியும் சாதாரணமானது அல்ல; அது ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் முக்கியமான பணியே” என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து, அதனடிப்படையில் வழங்கப்பட்ட பணி நியமனங்களும் செல்லாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

    KarurStampede MaduraiBench TNPSCOrder
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!
    Next Article கரூர் அரசு வேலை ரத்து:  உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லும் தமிழக அரசு
    Editor web2
    • Website

    Related Posts

    இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றம்:  ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை… விரைவில் புதிய நியமனம்!

    July 28, 2026

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    July 28, 2026

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றம்:  ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை… விரைவில் புதிய நியமனம்!

    உலக செஸ்: உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதும் குகேஷ்… தேதி அறிவிப்பு!

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    குடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.