Author: Editor web2
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. காவிரி உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தஞ்சாவூரில் தி.மு.க சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் செயல்பாடுகளையும் அமைச்சர்களையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதில் பெண்களைப் பற்றி வக்கிரமாகவும் அவதூறாகவும் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னையில் நடந்த அதிரடி இந்த வழக்கின் அடிப்படையில், இன்று விடியற்காலையில் சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்குச் சென்ற தஞ்சாவூர் தனிப்படை போலீஸார், அவரை கைது செய்தனர். கைதுக்கு முன்னதாக திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் ஒரு வழியாக காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்ட…
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, போராட்டம் என்ற பெயரில் திமுகவினர் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கும் சட்டம் – ஒழுங்கிற்கும் அச்சுறுத்தல் விளைவித்து வருவதாக தேசிய பாஜக மகளிரணித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கண்டனப் பதிவு வெளியிட்டுள்ள அவர், “உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையைக் கண்டித்து திமுகவினர் அரங்கேற்றும் அராஜகங்கள் கடும் கண்டனத்திற்குரியவை. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் காவல்துறையினரையே அச்சுறுத்தும் வகையில் சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் இந்தச் செயல்கள் ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானவை. சட்டம் தனது கடமையைச் செய்யும்போது அதற்கு மதிப்பளிக்காமல், வன்முறை மற்றும் அச்சுறுத்தல் அரசியலை முன்னெடுப்பது திமுக இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் திமுக மகளிரணியை விமர்சித்துள்ள அவர், “பெண்களைத் தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசும் தங்களது கட்சியினரைக் கண்டிக்காமல் மௌனம் காக்கும் திமுக மகளிர் அணி,…
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். கொண்டாட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி பேசுகையில், “நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியோடு, த.வெ.க. அரசு இந்த அராஜகக் கைதை மேற்கொண்டது. நீதிபதி 12 மணி வரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்ட நிலையிலும், திமிர்த்தனமாக அவரைப் போலீசார் கைது செய்தனர். இதனால் நீதிமன்றத்தின் கடுமையான கோபத்திற்குத் த.வெ.க. அரசு ஆளாகியுள்ளது. ஒருவரை விசாரணைக்கு அழைப்பதற்கு இவ்வளவு பெரிய காவல்துறைப் படையைக் குவிக்க வேண்டிய அவசியம் என்ன? சென்னையிலேயே விசாரணை நடத்தியிருக்க முடியும் எனும் போது, அவரை வேண்டுமென்றே தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றதன் பின்னணியில்…
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி திராவிடர் கழகம் தாக்கல் செய்த மனுவுக்கு, ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழகக் காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பிரச்சாரப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காகக் கடந்த ஜூலை 18 அன்று டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், உரியச் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பேரணி தொடங்க இருந்த சூழலில், ஜூலை 30 அன்று காவல்துறையினரால் திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறையின் இந்த நடவடிக்கை அரசியல் அமைப்பால் வழங்கப்பட்ட உரிமையைப் பறிக்கும் செயல் எனக் கூறி, அனுமதி மறுப்பு…
காவிரி உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் தோல்வியை மறைப்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக வெற்றி கழக அரசு அராஜகமாகக் கைது செய்துள்ளதாகவும், முதலமைச்சர் விஜய்யின் தொடர்ச்சியான ஆணவப் போக்கு அழிவை விரைவுபடுத்தும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி நீரைப் பெற முடியாத அரசின் கையாலாகாத்தனத்தையும், ‘ஜோக்கர் அமைச்சரவை’ என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் எழுந்த மக்கள் கொந்தளிப்பையும், அரசின் தோல்வியையும் திசைதிருப்பவே உதயநிதி வீட்டில் வைத்துப் போலீஸாரால் கைது செய்யப்பட்டுத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார். நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே அச்சுறுத்தும் வகையில் பிணையில் வர…
பெண்களுக்கு எதிராகப் பொதுவெளியில் அவதூறாகப் பேசும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய வக்கிரமான கருத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா எனச் சட்டத்துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களைப் பற்றிப் பொதுவெளியில் கொச்சையாகவும் வக்கிரமாகவும் பேசியுள்ளதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஒரு சாதாரண நபர் அல்லாமல், பொறுப்பான பதவியில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வளவு கேவலமாகப் பேசுவது சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட ஒருவர் எம்.எல்.ஏ-வாகவோ அல்லது பொது வாழ்க்கையிலோ நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை. இதனால்தான் மக்கள் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை அளித்துள்ளனர்” என்று சாடினார். தொடர்ந்து அதிமுகவை விமர்சித்த அவர்,…
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை ‘ரிமாண்ட்’ (சிறையில் அடைக்கும்) செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தஞ்சாவூரில் தி.மு.க சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையில் அவதூறான கருத்துகள் இடம் பெற்றதாகத் தமிழக வெற்றி பெற்ற கழகத்தின் (TVK) மகளிர் அணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தஞ்சாவூர் தனிப்படை போலீசார், இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து உதயநிதியை அதிரடியாகக் கைது செய்து விசாரணைக்காகத் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். இந்தக் கைதை எதிர்த்தும், முன்ஜாமீன் கோரியும் சென்னை உயர்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர். பார்த்திபன் தாக்கல் செய்த மனுவில், சாதி, மதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்ற கொள்கையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், தனது திரைப்படங்கள் மூலமாகவும் அந்த கருத்தை வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தன்னை “சாதி, மதமற்றவர்” என அங்கீகரிக்கும் சான்றிதழை பெற தாசில்தாரிடம் விண்ணப்பித்தபோது அது வழங்கப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, நீதிமன்ற உத்தரவின் மூலம் அந்தச் சான்றிதழைப் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “சாதி, மதமற்றவர்” என்ற சான்றிதழ் கோரி யாரேனும் விண்ணப்பித்தால், அவற்றை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை அரசு அரசாணை அல்லது சுற்றறிக்கை மூலம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது என்றும் மனுவில்…
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி வெடித்துள்ளது. அமைச்சர் பதவி கிடைக்காத சில எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா மிரட்டல் விடுத்துள்ளதால் கர்நாடகா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சராக பதவியேற்ற டி.கே. சிவக்குமார், 13 அமைச்சர்களுடன் ஆட்சியைத் தொடங்கியிருந்தார். தற்போது அமைச்சரவையில் இருந்த 20 காலியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. புதியதாக பதவியேற்ற 20 அமைச்சர்களில் 9 பேர் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவையில் இடம்பெறாததால் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட யஷ்வந்த்ராய்கவுடா பட்டீல் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். “40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். அமைச்சரவை வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மிகவும் மனவேதனை அடைந்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பெளலூர் கோபாலகிருஷ்ணாவும், தன்னை அமைச்சராக்காததால் எம்.எல்.ஏ. பதவியுடனும் மாநில வனத்துறை தொழில் கழகத் தலைவர் பதவியுடனும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். “முதல்வர் அல்லது அமைச்சர்களின்…
காவிரி நீர்திறப்பு, மேகதாது அணை, விவசாயிகள் நலன் உள்ளிட்ட விவகாரங்களில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசை முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆடிப்பெருக்கு நாளிலும் காவிரி நீர் தமிழகத்தை அடையாததால் டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 12-ஆம் தேதி கிடைக்க வேண்டிய காவிரி நீர், ஆகஸ்ட் மாதம் தொடங்கிய பின்னரும் வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறக்க மறுக்கும் நிலையில், அதைக் கண்டித்து முதலமைச்சர் விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என குற்றம்சாட்டியுள்ள அவர், அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக தமிழக விவசாயிகளின் நலனை அடகு வைக்கக் கூடாது என்றும் விமர்சித்துள்ளார்.…