Close Menu
    What's Hot

    வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றம்! – அன்புமணி கடும் விமர்சனம்

    விரைவில் இரண்டாகும் திருப்பூர் கோட்டம்.. சார் ஆட்சியர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

    ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து மீட்பு.. ஈரான் – ஓமன் உடன்படிக்கையின் முக்கியத்துவம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

    Editor web2By Editor web2August 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rain
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தின் சென்னை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூர், மதுரை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தெற்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். அந்தமான் கடலில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், குமரிக்கடலில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

    ChennaiRains FishermenAlert RainAlert TamilNaduWeather
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்குக்கு ஆன்லைனில் ரூ.5,100… வீடியோ காலில் பார்வையிட்ட 3 மகள்கள்…
    Next Article சென்னை எம்டிசி பஸ்சில் வைரலான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்.. உண்மை என்ன?
    Editor web2
    • Website

    Related Posts

    வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றம்! – அன்புமணி கடும் விமர்சனம்

    August 6, 2026

    விரைவில் இரண்டாகும் திருப்பூர் கோட்டம்.. சார் ஆட்சியர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

    August 6, 2026

    மக்கள் எதிர்பார்த்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது..?? உதயநிதி சரமாரி கேள்வி!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றம்! – அன்புமணி கடும் விமர்சனம்

    விரைவில் இரண்டாகும் திருப்பூர் கோட்டம்.. சார் ஆட்சியர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

    ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து மீட்பு.. ஈரான் – ஓமன் உடன்படிக்கையின் முக்கியத்துவம்!!

    கோவை : நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த சக நண்பர்கள்..! சடலத்துடன் செல்ஃபி எடுத்து பகிர்வு..!

    மக்கள் எதிர்பார்த்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது..?? உதயநிதி சரமாரி கேள்வி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.