தடையை மீறி தூத்துக்குடியில் பனைமரம் ஏறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள் விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார். விவசாயிகள் நலன் கருதியும், மரம் ஏறும் தொழிலாளர்கள் நலன் காக்கவும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தற்கு தமிழ்நாடு மட்டுமின்றி மத்தியிலும் எந்தவொரு கட்சிகளும் ஆதரவு தரவில்லை. தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குரல் கொடுத்து வருகிறார். கள் இறக்க அனுமதி வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (15.06.2025) தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை அருகே போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து சீமான், பனைமரம் ஏறி கள் இறக்கினார்.

இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பனைமரம் ஏறி கள் இறக்கிய சீமான் அதனை அனைவருக்கும் வாங்கினார். இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஏற்கனவே பனை மரத்தில் ஏறி சீமான் பயிற்சி மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
