சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம், வெளியீட்டிற்கு முன்னரே புதிய சாதனை படைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை ரூ.81 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தமிழ் திரைப்படம் ஒன்று, இவ்வளவு பெரிய தொகைக்கு வெளிநாட்டு உரிமைக்கு விற்பனையானது இதுவே முதல்முறையாகும்.
அனிருத் இசையில், ஆகஸ்ட் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படம், ரசிகர்கள் மற்றும் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் மாஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் இயக்க பாணி ஒன்று சேர்ந்திருப்பதால், “கூலி” படம் சூப்பர் ஹிட் ஆகும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.