திருவண்ணாமலை நித்யானந்த பீடத்தை சேர்ந்த நித்தியானந்தா என்ற ராஜசேகர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய் திருந்தார். அதில், நான் பக்தராக ஆதினம் மடத்திற்குள் நுழைய தடைவிதிக்க கூடாது. தனி நீதிபதி உத்தரவுக்கு இடைகால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மேல்முறையீட்டு மனு கூறியிருந்தார்.
இந்த மனு இன்று(19.06.2025) நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன் கடந்த பல வருடங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைகால விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் இதுகுறித்து இந்து சமய அறநிலைய துறை,பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் மனுதாரர் எங்கு உள்ளார். கைலாசா எங்கு உள்ளது. அங்கு எப்படி செல்வது. நீங்கள் சென்று உள்ளீர்களா பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதை தொடர்ந்து, அவரது சீடர் அரச்சனா என்பவர், ஆஸ்திரேலியா அருகில் உள்ள USK என்ற தனி நாட்டில் உள்ளார். ஐநா சபையில் அங்கீகாரம் உள்ளது. எங்கள் சார்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்க வேண்டு ம் என கூறினார்.
இதை தொடர்ந்து, நீதிபதிகள், வழக்கறிஞர் மாற்றுவதற்கு அனுமதி வழங்கி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.