சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக கவன்ட்ரி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக 12 ஆண்டுகள் பணியாற்றிய ஜெர்மனியை சேர்ந்த தாமஸ் பாச் விலகியதை அடுத்து, புதிய தலைவருக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் முன்னாள் நீச்சல் வீராங்கனை கிறிஸ்டி கவன்ட்ரி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
131 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டவர் என்ற மகத்தான பெருமையை 41 வயதான கவன்ட்ரி பெறுள்ளார். இந்த நிலையில், ஐ.ஓ.சி. அமைப்பு உருவாக்கப்பட்ட தினமான நேற்று, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கவுன்ட்ரி முறைப்படி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடந்த விழாவில் கோல்டன் சாவியை முன்னாள் தலைவர் தாமஸ் பாச் அவரிடம் வழங்கினார். ”ஐ.ஓ.சி. சிறந்தவரின் கைக்கு சென்று இருப்பதாகவும், அவர் நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் செயல்படுவார்” என்றும் முன்னாள் தலைவர் தாமஸ் பாச் கூறியுள்ளார்.