பிரபல இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா உள்ளிட்டோர் குடும்பமாக சேர்ந்து ஆன்லைன் பங்குச்சந்தை மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது.
ஏற்கனவே மனைவி அஸ்மிதா கொடுத்த புகாரில் youtuber விஷ்ணுவை அதிரடியாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடும்பத்தின் உறுப்பினர்களை தனித்தனியாக பழகி மோசடி செய்து இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு குடும்பம் மோசடி செய்ததாக புகார்
Forex ஆன்லைன் டிரேடிங் செய்வதாக கூறி சுமார் ஒரு கோடி 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு. தன் பெயரை பயன்படுத்தி டிரேடிங் மோசடி செய்ததாக மனைவி அஸ்மிதா புகார் அளித்த நிலையில், மனைவி அஸ்மிதா மீதும் வழக்கு பதிவு செய்துள்ளார்.
