சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு மிக முக்கிய வசதியாக மாறியிருக்கிறது மெட்ரோ ரயில் சேவை. சென்னை மெட்ரோவில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மட்டும், மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் விவரத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
சென்னை மெட்ரோ ரெயில் சேவையை நடப்பாண்டு ஜனவரி மாதம் 86,99,344 பேர், பிப்ரவரி மாதம் 86,65,803 பேர், மார்ச் மாதம் 92,10,069 பேர், ஏப்ரல் மாதம் 87,89,587பேர், மே மாதத்தில் 89,09,724 பேரும் பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 92,19,925 பேர் பயன்படுத்தியுள்ளனர்.
அதிகபட்சமாக ஜூன் 27-ந்தேதி 3,72,503 பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளனர். கடந்த மாதத்தில் பயண அட்டைகளை 6,09,226 பேரும், க்யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 42,07,124 பேரும், சிங்கார சென்னை அட்டையை 44,03,575 பேரும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.