திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க கோரி சீமான் தாக்கல் மனு தாக்கல் செய்துள்ளார்.
வருண்குமாரின் குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக வருண்குமார் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது என்று திருச்சி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது இன்று நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணை செய்த நீதிபதி திருச்சியில் விசாரிக்கப்பட்டு வரும் வருண்குமார் வழக்கிற்கு இடைக்கால தடை
தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார்.