Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் அவசர ஆலோசனை
    தமிழ்நாடு

    காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் அவசர ஆலோசனை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1352118
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை லாக்அப் மரணத்தை தொடர்ந்து அனைத்து காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இன்று நடந்த கூட்டத்தில் மண்டல ஐஜிக்கள், எஸ்பிக்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு உத்தரவுகள் அறிவுறுத்தல்களை டி.ஜிபி வழங்கி உள்ளார்.

    Social Media வில் தற்போது ஒரு தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது எனில் அதுதான் அதிகமாக பொதுமக்கள் மத்தியில் பரவுகிறது. அது போல ஏதும் பதிவிடப்பட்டிருந்தால் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் உண்மை தன்மை குறித்து மீடியாவில் பேட்டியாக கொடுக்கலாம். மேலும், State Fact Team-க்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை கண்டிறிய வேண்டும். அது பொய் செய்தியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது Legal opinion பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    காவல் நிலையத்துக்கு யாரும் புகார் அளிக்க வந்தால் உடனடியா FIR / CSR கொடுக்க வேண்டும். அதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது. காவல் நிலையத்தில் இதற்காகவே தான் RECEPTIONIST நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் எந்த ஒரு தங்கு தடையும் இருக்கக் கூடாது. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் பேப்பர் இல்லை பேப்பர் வாங்கிட்டு வா என்றோ, அதிகாரி இல்லை என்று சொல்லி அலைக்கழிக்கவோ திருப்பி அனுப்பவோ கூடாது.

    ஏதாவது பாதுகாப்பு அலுவல் என்றால் காவல் நிலையத்திலிருந்து காவலர்களை மொத்தமாக எடுக்கக்கூடாது. தேவை இல்லாமல் அதிகமான காவலர்கள் ஒரே இடத்தில் நியமிக்க கூடாது.

    பாதுகாப்பு பணிகள் குறித்து Proper Assessment வேண்டும். அதை பொறுத்து தான் பாதுகாப்பு பணிக்கு காவலர்களை நியமிக்க வேண்டும். எவ்வளவு Bandobust இருந்தாலும், ஸ்டேஷன்ல Minimum Strength இருக்க வேண்டும். அதாவது Light Station என்றால் 5 காவலர்களும், Medium Station என்றால் 10 காவலர்களுக்கு குறையாமலும், Heavy Station என்றால் 15 காவலர்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். Station Empty ஆக இருக்க கூடாது.

    சோசியல் மீடியாவில் காவல்துறைக்கோ அரசுக்கு எதிராகவோ, அரசின் திட்டங்களுக்கு எதிராகவோ, தவறான பதிவுகளை யாரும் பதிவு செய்திருப்பின் அப்பதிவின் மீது சரியான சட்ட கருத்துரை பெற்று சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் தங்கள் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் யாரேனும் அபாயகரமான ஆயுதங்கள் வைத்துக்கொண்டோ அல்லது பைக் ஸ்டண்ட் செய்தோ ரீல்ஸ் போன்ற பதிவுகள் செய்யக்கூடாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது. அப்படி பதிவு செய்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவில்களில் சாமி கும்பிடுவது, திருவிழா நடத்துவது, போன்ற நிகழ்வுகளில் சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் மோதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

    Drive against Drugs போதை பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுகள் நடத்தப்பட வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்க வேண்டும்.

    முக்கிய பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை நியமித்தலை தவிர்க்க வேண்டும். முக்கிய பாதுகாப்பு பணிகளுக்கு முன்கூட்டியே Mirror தயார் செய்ய வேண்டும். அதில் காவலர்கள், பெண் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படையினர் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு தகுந்த பயிற்சி கொடுக்க வேண்டும் தேவையில்லாமல் லத்தியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    யாரையேனும் கைது செய்யும்போது பொதுமக்களுக்கு தெரியும் அளவிற்கு செய்யாமலும், அதன் மூலம் ஏதாவது பிரச்சனை ஏற்படும் அளவிற்கு உள்ளதாகவும் இருக்கக் கூடாது. தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து கைது செய்ய வேண்டும். அதனை பிரபலப்படுத்தும் அளவிற்கு இருக்கக் கூடாது. அதன் முலம் ஏதும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுறைந்த ரயில்வே கட்டண உயர்வு என்பது வெறும் கண் துடைப்பு.. வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
    Next Article தவெக கொடியில் யானை சின்னம்- பகுஜன் சமாஜ் கட்சி புதிய மனு
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.