இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு விளையாட்டு வீரர்கள் முதல், அரசியல் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எம்.எஸ்.தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

”அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பெருமை பிறப்பிலேயே வருவதல்ல, எடுக்கும் ஒவ்வொரு முடிவினாலும், ஒவ்வொரு ஓட்டத்தினாலும், அமைதியாக ஈட்டுகின்ற ஒவ்வொரு வெற்றியாலும் கட்டமைக்கப்படுவது அது என நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.
