1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு TRB போட்டித் தேர்வு அறிவிப்பு – செப்டம்பர் 28ஆம் தேதி தேர்வு!
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1996 முதுகலை ஆசிரியர் (PG Assistant) பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்பும் நோக்கில், போட்டித் தேர்வு நடத்தப்படும் என TRB தெரிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பெறப்படும் வகையில் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: ஆகஸ்ட் 12, 2025 – மாலை 5 மணி வரைTRB அறிவித்தபடி, போட்டித் தேர்வு வரும் செப்டம்பர் 28, 2025 அன்று நடைபெறும். தேர்வு நேரம், மைய விவரங்கள் உள்ளிட்ட மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.