திருப்பூர் மவாட்டம் அவினாசியை சேர்ந்தவர் தொழிலதிபர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி கவின் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 300 சவரன் நகை, ரூ.70லட்சத்தில் சொகுசு கார், ரூ.5கோடியில் பிரம்மாண்டமாக திருமணம் என கோலாகலமாக நடைபெற்றது.
திருமணம் நடந்த இரண்டரை மாதங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி விஷமருந்தி ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் அழுதபடி, ஆடியோக்கள் சிலவற்றை அனுப்பி வைத்திருந்தார். அதில், தனது மரணத்திற்கு கணவர், மாமியார், மருமகள் ஆகியோர் தான் காரணம் என தெரிவித்திருந்தார். வரதட்சணை கேட்டு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார் ரிதன்யா.
அவது வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக ஜாமின் கேட்டு கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்து ரிதன்யாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர்கள் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர். அதனை ஏற்ற நீதிமன்றம் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தொடர்ந்து சித்ராதேவியும் ஜாமின் கேட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ரிதன்யாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர் மூலம் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து நீத்பதி உத்தரவிட்டிர்நுதார். அதன்படி, இன்றைய விசாரணையில், சித்ராதேவியின் ஜாமின் மனுவை திருப்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
