கோவையில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
கோவை பி.என் புதூர் பகுதியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய வேளாண் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. பருத்தி மற்றும் கரும்பு ஆராய்ச்சிகளுக்கு தனித்தனியாக இங்கு மையங்கள் அமைந்து உள்ளன. இங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு நாடு முழுவதும் புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மத்திய இணை அமைச்சர்கள் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பருத்தி ஆராய்ச்சி மைய விளை நிலங்களை பார்வையிட்ட அமைச்சர்கள் அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பருத்தி நடவு திட்டத்தையும், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிதாக கண்டு அறியப்பட்டு உள்ள டிராக்டர்களையும் பார்வையிட்டனர்.
பின்னர் அங்கிருந்த பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்கள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்ட அறிந்தனர். இதைத் தொடர்ந்து பருத்தி ஆராய்ச்சி பற்றியும் கேட்டு அறிந்தனர். கண்டறியப்பட்ட புதிய வகை பருத்திச் செடிகள் குறித்த கண்காட்சியை அவர்கள் பார்வையிட்டு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளிடம் அவை குறித்து கேட்டறித்தனர். இதைத் தொடர்ந்து கரும்பு ஆராய்ச்சி மையத்திற்கும் சென்று அவர்கள் பார்வையிட்டனர்.
