Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»”நிகழ்காலமும் நான்தான்… எதிர்காலமும் நான்தான்”… ராமதாஸ் கடிதம்…
    அரசியல்

    ”நிகழ்காலமும் நான்தான்… எதிர்காலமும் நான்தான்”… ராமதாஸ் கடிதம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 12, 2025Updated:July 12, 2025No Comments5 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமகவில் உட்கட்சி பூசல் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு கட்சி பிளவுபடும் அளவுக்கு சென்றுள்ளது. ஒருபுறம் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ராதமாஸின் ஆதரவாளர்களை நீக்குவதுமாக குழப்பங்களுக்கு மத்தியில் தொண்டர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் சமூகநீதியின் அடையாளமாகவும், அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து, 37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன என்கிற போதே, இந்த 36 ஆண்டுகளில் ஓர் அரசியல் கட்சியாக என்னென்ன நாம் சாதித்தோம்? என்ற வினாவை நீங்களும் எழுப்புவீர்கள், நானும் என்னை நோக்கி அதே வினாவைத்தான் எழுப்புவேன்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் துணை இல்லாமல், மக்களுக்கான எந்த நியாயமும், மத்தியிலோ – மாநிலத்திலோ இதுவரை யாராலும் பெற்றுத் தரப்படவில்லை என்ற ஒன்றே போதுமானது. மனநிறைவானது. திட்டவட்டம்
    தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும் நம்மை விட அதிகமாக போராட்டக் களத்தில் நின்ற ஒரேயொரு கட்சியை யாராவது காட்டிவிட முடியுமா?

    நேற்று எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்த விஷயங்களை, இன்று ஆளுங்கட்சி ஆனதும், எதிர்த்த விஷயத்துக்கே அங்கீகாரம் கொடுத்து ஆதரிக்கும் ‘இரண்டு கழக’ ங்களையும், மத்தியில் ஆண்ட காங்கிரசையும், இப்போது ஆள்கிற பா.ஜ.க.வையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    மக்கள் நலன்சார்ந்து எப்போதும் யாரையும் எதிர்த்து நிற்கிற கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருவதை நினைத்து பெருமையடைகிறேன்.

    மக்கள் குரலாகவே நம்முடைய குரல் எப்போதும் இருக்கும் காரணத்தால், எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவென்று எல்லாத் தரப்பும் உற்று நோக்கும் நம்பிக்கை கட்சியாக இருக்கிற ஒன்று போதுமே நிம்மதிக்கு !

    பாட்டாளி சொந்தங்களைப் பொறுத்தவரை, ‘நாம் ஆள்கிற காலம், இன்றே வந்து விடாதா அல்லது இரண்டொரு நாளில் வந்து விடாதா?’ என்ற ஆற்றாமை இருக்கத்தான் செய்யும், அதை நானும் அறிவேன். நம்முடைய கையில் ஆட்சியதிகாரம் இல்லாத போதே நாம் வென்றெடுத்திருக்கும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களும், தீர்வுகளும் ஏராளம். ஆள்வோரால் கூட சாத்தியமற்ற பல்வேறு மக்கள்நலப் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி செய்து முடித்திருக்கிறது என்ற உண்மையை நமக்கு ‘எதிர் அரசியல்’ செய்வோர்கூட மறுக்க முடியாதே.

    விசாரணை வேண்டும் – வழக்கறிஞர் கே.பாலு
    நம்மால் பொது ஆதாயம் பெற்றோர், பொதுவெளியில் அதை ஒப்புக்கொள்ள ‘சுயம்’ தடுத்தாலும், நான்கு அறைகளுக்குள் நம் உழைப்பில் பெற்ற பலனை குடும்பத்தாரோடு பேசிக் களிப்பதை மறுக்கத்தான் முடியுமா !

    தமிழ்நாட்டு அரசியலின் திசையை தீர்மானிக்கும் சக்தி, பா.ம.க. என்பதை காலம், தன்னுடைய பக்கங்களில் மறக்காமல் பதிவு செய்தே வைத்திருக்கிறது. வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20% இட ஒதுக்கீடு, 10.50% வன்னியர் இடஒதுக்கீடு, 3.50% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, 3% அருந்ததியர் இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.50% இட ஒதுக்கீடு; என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது; பாட்டாளிகளின் சொந்தங்களான நாம் தான்.

    என் வாழ்நாளில் 95 ஆயிரம் கிராமங்களுக்கு நான் நடந்தே பயணம் போயிருக்கிறேன், நடந்து போய்த்தான் எளிய மக்களை அவர்கள் வாழ்விடத்திலேயே சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை என் தோளில் தூக்கி சுமந்திருக்கிறேன். உங்களை 95 ஆயிரம் கிராமங்களுக்குப் போகச் சொல்லவில்லை, குறைந்தது 95 கிராமங்களுக்காவது போய் வாருங்கள்.

    காரில் போகாதீர்கள், அவர்களை விட்டு அந்நியமாகி நிற்காதீர்கள், மோட்டார் சைக்கிளில் போங்கள், உங்களோடு மனம் விட்டுப் பேசுவார்கள். இன்னும் தீர்க்க முடியாத பிரச்சினைகளை மக்கள் தலையில் சுமந்து திரிகிறார்கள், அந்த சுமைகளை நீங்கள் இறக்கி வாங்கிக் கொள்ளுங்கள். எப்படித் தீர்க்க வேண்டுமோ, அப்படி தீர்க்கப் பாருங்கள், வழி தெரியவில்லையா, தைலாபுரத்துக்கு எனக்கு ஒரு போன் செய்யுங்கள், நான் தீர்க்கிறேன், நீங்கள் நம்புகிற இந்த ‘அய்யா’ வால் எதையும் செய்யமுடியும்.

    மக்களின் ஆதரவைப் பெறாமல் எப்போதுமே வெற்றி சாத்தியம் இல்லை. நம்மைப் பொறுத்தவரையில் தேர்தல் தூரத்தில் இருக்கிறது, மிக அருகில் வந்து விட்டது என்ற அரசியல் கணக்குப் போட்டு மக்கள் பணிக்கான திட்டமிடலை வைத்துக் கொள்வது இல்லை. இதை எல்லோருமே ஒப்புக் கொள்வர்.

    தமிழ்நாட்டில் பா.ம.க. வின் 36 ஆண்டுகால பணியும், அதே 36 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றங்களும் ஒரே நேர்க்கோட்டில் தான் இருக்கும். ஏனெனில் பா.ம.க.வின் பங்களிப்பு இன்றி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மத்தியிலும் இதே நிலைதான். மக்கள் நலன் சார்ந்த மசோதா வெற்றி பெற்றது என்றால், அதில் பா.ம.க.வின் பங்களிப்பு உறுதியாக இருக்கும்,

    மக்கள் நலனுக்கு எதிரான ஒரு மசோதா தோற்றுப் போயிருக்கிறது என்றால் அது பா.ம.க.வின் நிலைப்பாட்டால்தான் என்ற நிலைஇருக்கும். இது எவராலும் மறுக்க முடியாத உண்மை. தமிழ்நாட்டு அரசியலில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக எப்போதும் இருப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரையில் கடந்து வந்திருக்கும் 36 ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக 51 ஆவணங்களை வெளியிட்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். அவைகள் வெறும் ஆவணங்கள் அல்ல, மக்கள் நலனுக்கான பாதுகாப்பு அரண்கள், என்றே அறிஞர் பெருமக்கள் எப்போதுமே சொல்வார்கள்.

    தமிழ்நாட்டின் முதன்மைத் தொழிலான வேளாண்மைக்கு என தனி நிழல்நிதிநிலை அறிக்கை, எல்லா ஆட்சி காலத்திலும் தாக்கல் செய்யப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான்.

    2008-ஆம் ஆண்டில் தொடங்கி 17 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து வெளியிட்டு பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்து வரும் அழுத்தம் காரணமாகத்தான்; இன்று, வேளாண்மைக்கு தனி நிழல் நிதி அறிக்கையை ஆட்சியாளர்கள் வெளியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் மக்களைப் பாதிக்கும் எந்த சிக்கலாக இருந்தாலும் அதற்கான முதல் எதிர்க்குரல் பா.ம.சு.விடம் இருந்து தான் ஒலிக்கும்.

    அப்படியான எதிர்க்குரலின் வேகத்தால், ஆட்சியாளர்களால் திரும்பப்பெறப்பட்ட மக்கள் விரோத செயல்பாடுகள், அரசாணைகள், திட்டங்கள் ஏராளம். அதனால் தான் மக்கள் தங்களின் குரல்களை வெளிப்படுத்துவதற்கான கட்சியாக பா.ம.க.வை கருதுகின்றனர். பா.ம.க.வை தேடி வருகின்றனர். இதுவே பா.ம.க.வுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். தமிழ்நாட்டில் மதுவிலக்குக்காக ஐநூறுக்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியதோடு நிறுத்தாமல், சட்டப் போராட்டமும் நடத்தி 3321 மதுக்கடைகளை மூடியது – மூட வைத்தது பா.ம.க.தான்.

    மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு விஷயத்துக்கும் யாரையும் – எப்போதும் எதிர்க்கும் இடத்தில் பா.ம.க. நிற்கும் என்பதை என்னுடைய இறுதிமூச்சுவரை உறுதியாக கடைபிடிப்பேன். பாட்டாளி சொந்தங்களும் அதை பின்பற்ற வேண்டும். இதுவரை நாம் கடந்து வந்த 36 ஆண்டுகளை விட, இந்த 37- ஆம் ஆண்டு பல புதிய அனுபவங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

    முன்பை விட புதிய உற்சாகத்துடன் புதிய எழுச்சியுடன் எந்த போராட்டத்தையும் மக்களுக்காக முன்னெடுக்க தயாராகவே இருக்கிறேன். இனி நமக்கெல்லாம் பொற்காலம்தான். நீங்கள் குக்கிராமங்களில் இருக்கிறீர்களோ, நகரங்கள்- தலை நகரங்களில் இருக்கிறீர்களோ; உங்கள் வீடுகள், அலுவலக முகப்புகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிகளை ஏற்றுங்கள். ஏழை மக்களுக்கு சட்ட உதவியும், மருத்துவ உதவியும், கல்வி உதவியும் செய்வதில் முதன்மையான நபர்களாக இருங்கள்.

    எனக்கு உங்களைப் பற்றிய கவலைதான் எப்போதும். ஆரோக்கியத்தை விட்டு விடாதீர்கள். மதுவுக்கும், புகையிலைக்கும் எதிராக நாம் முன்னெடுத்த போராட்டங்கள் லட்சத்தை தாண்டும்.

    என்னைப் போன்று ஆரோக்கியமாக வாழுங்கள், உழைப்பை ஒருபோதும் கை விட்டு விடாதீர்கள், உங்களின் உற்சாகக்குரலே என்னை புதுப்பிக்கிறது; என்னை உற்சாகப் படுத்துகிறது; இன்னும் போராடச் சொல்கிறது; எதிரே எத்தனைபேர் என்று கணக்கு வைத்துக் கொள்ளாமல் மோதிப் பார்க்க சொல்கிறது; எதிர்க்க இளைஞர்களை மட்டுமே மனசு எதிர்பார்க்கிறது; இத்தனை தெம்பும், தினவும் பாட்டாளி சொந்தங்களின் அரவணைப்புதான் எனக்கு கொடுக்கிறது.

    பாட்டாளி சொந்தங்களின் நெடுநாள் கனவை நிறைவேற்ற எனக்குள் புதுரத்தம் பாயத் தொடங்கி இருக்கிறது. அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ பாட்டாளி சொந்தங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். போர்க்குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது, அதன் சீற்றமும் குறையாது; மக்களுக்காக கொடுக்கும் அதன் கர்ஜனையும் மாறாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயுனெஸ்கோ பட்டியலில் இடம் பிடித்த செஞ்சி கோட்டை… அனைவரும் பார்வையிடுமாறு மோடி வலியுறுத்தல்…
    Next Article இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கனும்.. . கண்ணீர் விட்ட வனிதா விஜயகுமார்…
    Editor TN Talks

    Related Posts

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.