தமிழ் திரைத்துறையில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் படங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படமும் வசூல் சாதனை படைத்துள்ளது.
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை வாய்ந்தவர் சசிகுமார். இவருடன் சிம்ரன், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. ரூ.7கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.90கோடி அதாவது முதலீட்டு தொகையை விட 1200 சதவீதம் அதிக லாபம் ஈட்டியுள்ளது.
2025-ம் ஆண்டு இந்திய திரைப்பட வரலாற்றில், எந்த ஒரு படமும் இப்படி ஒரு வசூல் சாதனையை படைத்தது இல்லை எனக் கூறப்படுகிறது. அபினேஷ் ஜீவித் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி படம் வெளியானது. அப்போது வெளியான சூர்யாவின் ரெட்ரோ படத்தை ஓரம் கட்டி அதிக திரையரங்குகளை கைப்பற்றியது டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.