நெல்லையில் ஒரு பெண்ணை காதலித்த இருவருக்கு ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கே.டி.சி நகரில் இன்று காலை இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின்குமார் என்பதும், சென்னை ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரியவந்தது.
கவின்குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை போலீசார் கவின்குமார் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். தொடர்ந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.