சிம்புவின் 49-வது படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு புது அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
நடிகர் சிம்பு தக் லைப் பட வெற்றியை தொடர்ந்து வெறிமாறன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். அவரது 49-வது படமாக உருவாகும் இப்படமானது வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமாகவும் இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் சிம்புவுடன் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடிக்கடி இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிதி பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, படக்குழு புது அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை ஆகஸ்ட் 2 அல்லது 3வது வாரத்தில் தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
