துரோகத்தின் சாயல் படிந்தவர் தன்னை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவையே யார் என்று கேட்டவர் துரோகத்தைப் பற்றி பேசக்கூடாது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மனிதநேய விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று புளியந்தோப்பு மற்றும் சூளையில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு காலை உணவு வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார்….
எதிர்க்கட்சியினர் முதலமைச்சரை சந்திப்பது துரோகத்தின் வெளிப்பாடு என்ற தமிழிசை மற்றும் எடப்பாடியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எடப்பாடி அமித்ஷாவை சந்தித்ததை எப்படி எடுத்துக் கொள்ளலாம், மோடியை நான்கு கார்களில் மாறி மாறி சந்திப்பதை எப்படி எடுத்துக் கொள்ளலாம்….
முதல்வரின் சிறிய உடல்நல குறைவின் காரணமாக இல்லத்தில் வந்து சந்தித்ததை எப்படி துரோகம் என்று சொல்ல முடியும் . மனிதநேயம் உள்ள மனிதாபிமானமுள்ள யாரும் இதனை துரோகம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
துரோகத்தின் சாயல் படிந்தவர் தன்னை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவே யார் என்று கேட்டவர் துரோகத்தைப் பற்றி பேசக்கூடாது என்று கூறினார்.
