Close Menu
    What's Hot

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 டிசம்பர் 2025

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தூய்மை பணியாளர்கள் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை உள்ளதா? அன்புமணி கேள்வி…
    தமிழ்நாடு

    தூய்மை பணியாளர்கள் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை உள்ளதா? அன்புமணி கேள்வி…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 7, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூய்மை பணியாளர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ”சென்னையில் ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தால் சென்னையில் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் நாற்றம் வீசுகிறது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஏழாவது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம், திருவிக நகர் ஆகிய இரு மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தில்லி எம்.எஸ்.டபிள்யூ சொலுஷன்ஸ் லிமிடெட் (Delhi MSW Solutions Ltd) என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு மண்டலங்களிலும் 5,180 தூய்மைப் பணியாளர்கள் குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் நிரந்தரப் பணியாளர்கள் அம்பத்தூர் மண்டலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் அனைவரும் தூய்மைப் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள தில்லி எம்.எஸ்.டபிள்யூ சொலுஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியில் சேரும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அதைக் கண்டித்து தான் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஒருபுறம் இதுவரை சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இன்னொருபுறம் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள நிறுவனம், இன்னும் அதன் பணியைத் தொடங்கவில்லை. அந்த நிறுவனத்தில் தூய்மைப் பணிகளை செய்ய போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் சேரவில்லை. அதனால் 7 நாள்களுக்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாததால் முகப்பேர், நொளம்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும், பெரம்பூர் நெடுஞ்சாலை, சூளை மெயின் ரோடு, சாந்தி காலனி 4வது அவென்யூ மற்றும் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் சாலையிலும் குப்பைகள் அகற்றப்படாததால் அங்கு தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியின் பல பகுதிகளும் இப்போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தெருவெங்கும் குப்பைகள் மலை போல குவிந்து கிடப்பதால் தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த சிக்கலின் தீவிரத்தை முற்றிலும் உணராத சென்னை மாநகராட்சி ரூ.2,300 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தால் தாங்கள் எந்த வகையில் பயனடையலாம் என்று கணக்குப் போடுவதில் தான் தீவிரம் காட்டி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்றாலும் கூட, அவற்றை நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசு முன்வரவில்லை.

    தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த போது, அவர்களுக்கு தினமும் ரூ.700 வீதம் மாதம் ரூ.21,000 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தப் பணியாளர்களாக பணிக்கு சேர்ந்தால் அவர்களுக்கு மாதம் ரூ.15,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படும். அவர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருபவர்கள். அவர்களுக்கு இந்த ஊதியம் போதுமானது அல்ல.

    அதுமட்டுமின்றி தூய்மைப் பணியாளர்கள் இனியும் ஒப்பந்தப் பணியாளர்களாகவே பணியில் நீடிக்க முடியாது. தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டால் தான் மனநிறைவுடனும், ஓரளவு பொருள் நிறைவுடனும் பணி செய்ய முடியும். அதை விடுத்து அவர்களை பணிநீக்கம் செய்வதை ஏற்க முடியாது. தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதற்காக தமிழக அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் கூறப்படும் காரணங்கள் ஏற்க முடியாதவை. முந்தைய அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால், இப்போது மீதமுள்ள மண்டலங்களை நாங்கள் தனியாரிடம் ஒப்படைக்கிறோம் என்பது அபத்தமாகும். பணி நீக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கொரோனா பெருந்தொற்று மற்றும் பேரிடர் காலங்களில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியவர்கள். கொரோனா காலத்தில் துப்புரவு பணியாளர்கள் 13 பேர் பணியில் இருக்கும் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர். அவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் கூட மதிக்காமல் பணி நீக்குவது மனிதநேயமற்ற செயலாகும்.

    2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சென்னையில் பல மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்பட்டதால் 700 பணியாளர்கள் நீக்கப்பட்டனர். அப்போது அது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பணி நீக்கப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர் பட்டியலினத்தவர் என்பதால் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார். இன்று அவரே முதல்-அமைச்சர் ஆகியுள்ள நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் நீக்கப்படுகின்றனர். அதிகாரம் என்ற போதை கண்ணை மறைப்பதால், பணி நீக்கப்படுபவர்கள் பட்டியலினத்தவர்கள் என்ற உண்மை அவருக்குத் தெரியவில்லை போலிருக்கிறது.

    2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால், தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால் தூய்மைப் பணியாளர்கள் இப்போது பணி நீக்கப்பட மாட்டார்கள்; மாறாக வாழ்வாதார உத்தரவாதம் பெற்று வசதியாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால், திமுக சொன்னதை செய்யாமல், துரோகம் செய்ததன் விளைவு தான் தூய்மைப் பணியாளர்கள் வேலை இழந்து வாடிக் கொண்டிருக்கின்றனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்மையாகவே பட்டியலினத்தவர் மீதும், தூய்மைப் பணியாளர் மீதும் அக்கறை இருந்தால், அவர்களை பணி நீக்கம் செய்யும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். மாறாக தற்காலிக தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேசி பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇலங்கையால் கைது செய்யப்பட்ட 80 மீனவர்கள்… விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…
    Next Article திருப்பூரில் இளம் பெண் தற்கொலை… கணவர் குடும்பத்துடன் கைது…
    Editor TN Talks

    Related Posts

    பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிறார்!.  செல்வப்பெருந்தகை கண்டனம்!,

    December 29, 2025

    மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

    December 29, 2025

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 டிசம்பர் 2025

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    பகை முடிவுக்கு வந்தது! சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

    Trending Posts

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 டிசம்பர் 2025

    December 30, 2025

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    December 29, 2025

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    December 29, 2025

    பகை முடிவுக்கு வந்தது! சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.