தமிழ்நாட்டில் 46 ஆயிரம் கோவில்கள் இருக்கிறது, ஆனால் கோவில் சொத்துக்கள் மூலமாக வரக் கூடிய வருமானம் மட்டும் வெறும் 300 கோடி தானா என்று இந்து சமய அறநிலையத்துறையை நோக்கி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் வடக்கு பகுதியில் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று நீரில் கரைக்கப்படும் நிலையில் துடியலூர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற உள்ள பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசும்போது :-
கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்த கணக்கில் எந்த விதமான வெளிப்படை தன்மையும் இல்லை. மூன்று லட்சம் கோடி ஒரு அரசு பட்ஜெட் போட்டும், வருமானம் இல்லை கோவில் பக்தர்கள் கொடுத்த நகைகளை, பிரித்து அதில் வரக் கூடிய சில கோடிகளை வைத்து தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்று திமுக பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறது.
கோவிலில் ஒவ்வொருவரும் மனம் உருகி அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று கொடுத்தது அல்ல. அது கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நகை. அது உடைந்த நகை பயன்படுத்த முடியாத நகையை உருக்கி இருக்கிறோம் என அரசு கூறுகிறது.
தமிழ்நாட்டில் எத்தனையோ சாமானிய மக்கள் கேள்வி கேட்டும் கூட எவ்வளவு டன் நகையை உறுப்பினர் எப்படிப்பட்ட நகை ஒடுக்கப்பட்ட நகை எங்கே இருக்கிறது ? அதன் மூலமாக எவ்வளவு வருமானம் வந்து இருக்கிறது அதை என்ன செய்து இருக்கிறார்கள் என்பதற்கான பதில் வராது. ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகள் மீறப்படுகிறது.
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் கொள்ளை கோவில் பராமரிப்பு போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் உட்பட நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட எதையும் அறநிலையத் துறை மதிக்கவே இல்லை. 1986 க்கு பிறகு தமிழகத்தில் கோவிலின் உடைய சொத்துக்கள் மட்டுமே ஒரு லட்சம் ஏக்கர் நாம் இழந்து இருக்கிறோம். 50 ஆண்டுகளில் கோவில் நிலங்களில் இருக்கக் கூடிய வணிக வளாகங்கள், 1 ரூபாய் வாடகைக்கு இருக்கிறார்கள். அதனால் தான் கோவில் சொத்துக்கள் மூலமாக அறநிலைத் துறைக்கு தமிழகத்தில் வரக் கூடிய மொத்த வருமானமே 300 கோடி ரூபாய் தான். ஐந்தரை லட்சம் ஏக்கர் இருக்கிறது, 46 ஆயிரம் கோவில்கள் இருக்கிறது, ஆனால் கோவில் சொத்துக்கள் மூலமாக வரக் கூடிய வருமானம் மட்டும் வெறும் 300 கோடி தான்.
அதையெல்லாம் தட்டிக் கேட்பதற்கான நேரம் இது தான். நீங்கள் இதையெல்லாம் நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். இதையெல்லாம் கேள்வியாக கேட்பதை நம்முடைய கடமையாக கருத வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.