தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்ததராஜன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது..
திமுகவின் இந்து எதிர்ப்பு பிரச்சனையினால் நாங்கள் கலாச்சாரப் போரில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். கீழடி பொறுத்தவரை நாங்கள் தமிழர்களின் தொன்மையை மறைப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் தொன்மையை வெளிக் கொண்டு வருவதற்கு அதிக நிதி கொடுத்தவர் பாரதப் பிரதமர்.
நாங்கள் கோட்டைக்கு செல்லும்போது இரட்டை இலையுடன் தாமரை மலரும். கலாச்சார போரை நிலை நிறுத்துவோம். திமுக மக்களுக்கு எதிர்ப்பாக இருக்கிறது நாங்கள் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதற்கு உதாரணம் ஜிஎஸ்டி.
வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார் இது குறித்த கேள்விக்கு:-
வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். ஹைட்ரஜன் பாம் போடுகிறேன் என்று சொல்கிறார்கள். பாரதப் பிரதமர் ஆப்ரேஷன் சிந்தூரே நடத்திக் காண்பித்தவர். எந்த ஹைட்ரஜன் பாம் போட்டாலும் பாரத பிரதமர் வெற்றி பெறுவார்.