Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், ஜடேஜா சதம் – வலுவான நிலையில் இந்திய அணி
    விளையாட்டு

    கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், ஜடேஜா சதம் – வலுவான நிலையில் இந்திய அணி

    Editor TN TalksBy Editor TN TalksOctober 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    KL Rahul Dhruv Jurel Ravindra Jadeja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சதங்களால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

    இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நேற்று (அக்-2) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான டெகநரைன் சந்தர்பால், சிராஜ் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல், ஜான் கேம்பெல் 8 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.

    தொடர்ந்து, பிரண்டன் கிங் (13), அலிக் அதென்ஷே (12) இருவரையும் முஹமது சிராஜ் வெளியேற்றினார். அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் போல்டானார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்திய அணி தரப்பில் முஹமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜாஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களிலும், சாய் சுதர்சன் 7 ரன்களிலும் வெளியேறினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்களுடனும், சுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது சுப்மன் கில் அரைசதம் எடுத்து (50) வெளியேறினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய கே.எல்.ராகுல் தனது 11ஆவது சதத்தை நிறைவு செய்த பின், வாரிகன் பந்தில் வெளியேறினார். அவரை தொடர்ந்து, 190 பந்துகளில் சதத்தை கடந்த துருவ் ஜூரல் 125 ரன்களில் வெளியேறினார்.

    அபாரமாக ஆடிய ரவீந்திர ஜடேஜாவும் தனது சதத்தை நிறைவு செய்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 104 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இது வெஸ்ட் இண்டீஸ் அணியினர் எடுத்த ரன்களை விட 286 ரன்கள் கூடுதலாகும்.

    இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் கூடுதலாக இன்னும், குறைந்தபட்சம் நூறு ரன்களாவது எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னின்ஸில் 400 ரன்களை கடந்தாக வேண்டிய நிலை ஏற்படும். இந்திய அணியின் அபார பந்துவீச்சை வெஸ்ட் இண்டீஸ் தாக்குப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    Dhruv Jurel First Test Match india KL Rahul Ravindra Jadeja West Indies இந்தியா கே.எல்.ராகுல் துருவ் ஜூரல் முதல் டெஸ்ட் போட்டி ரவீந்திர ஜடேஜா வெஸ்ட் இண்டீஸ்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘நீதிமன்றம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது’ – கரூர் விவகாரத்தில் நீதிபதி காட்டம்
    Next Article புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
    Editor TN Talks

    Related Posts

    ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்து அபாரம் – 318/2 என்ற வலுவான நிலையில் இந்தியா

    October 10, 2025

    தோனி வருகையால் குதூகலமான மதுரை விமான நிலையம்! – ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு

    October 9, 2025

    3 பேர் சதம் விளாசல்; 2 பேர் நான்கு விக்கெட் – இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி

    October 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.