Close Menu
    What's Hot

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»குழப்பத்தை உண்டாக்கும் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! – ஆர்.என்.ரவிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
    தமிழ்நாடு

    குழப்பத்தை உண்டாக்கும் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! – ஆர்.என்.ரவிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

    Editor TN TalksBy Editor TN TalksOctober 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    RN Ravi and MK Stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு யாருடன் போராடும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டிருந்த நிலையில், குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ”தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்ற முழக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைத்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற வள்ளலார் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு யாருடன் போராடும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியிருந்தார்.

    மேலும், “மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது தமிழ்நாடு போராடும் என்று சுவர்களில் எழுதியுள்ளார்கள், யாருடன் போராடும்? தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை, இங்கு எந்த சண்டையும் இல்லை” என குறிப்பிட்டு ஆளுநர் விமர்சனம் செய்து இருந்தார்.

    இந்நிலையில் இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ள அவர், “தமிழ்நாடு யாருடன் போராடும்?” என ஆளுநர் கேட்டுள்ளார்…

    இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!

    அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் – புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!

    உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!

    ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!

    தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை – தொழில் வளர்ச்சியை – வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!

    ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!

    உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல், கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!

    #Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்! ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!

    நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!

    நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!

    இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!” என்று தெரிவித்துள்ளார்.

    Chaos Chief Minister M.K. Stalin Governor R.N. Ravi Tamilnadu Poradum ஆளுநர் ஆர்.என்.ரவி குழப்பம் தமிழ்நாடு போராடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்யிடம் ஏன் இந்த கேள்விகளை கேட்கவில்லை; பிறகு மீண்டும் பேசுவோம் – செந்தில் பாலாஜி காட்டம்
    Next Article வாக்காளர் குளறுபடி; 22.7 லட்சம் தலித், முஸ்லிம் பெயர்கள் நீக்கம் – செல்வப்பெருந்தகை கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    December 25, 2025

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    December 24, 2025

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    Trending Posts

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    December 25, 2025

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    December 25, 2025

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    December 25, 2025

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.