Close Menu
    What's Hot

    அமைதிப் பேச்சுவார்த்தையில் நெருங்கி வரும் உக்ரைன், ரஷ்யா: ட்ரம்ப் தகவல்

    விபத்து நடந்த உடனேயே ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்ய கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

    மெல்போர்ன் டெஸ்ட் ஒரு கேலிக்கூத்து என்பது பிட்சினால் அல்ல பேட்டர்களினால் – இயன் சாப்பல் சாடல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரிக்கு இன்று முதல் ஆம்னி பேருந்து ஓடாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
    தமிழ்நாடு

    கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரிக்கு இன்று முதல் ஆம்னி பேருந்து ஓடாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    omni
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்று மாலை 5 மணி முதல் தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரிக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பேருந்துகளை கேரள போக்குவரத்து துறையினர் திடீரென சிறை பிடித்து அவற்றில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கி விட்டுள்ளனர். மேலும், பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

    இதனை கண்டித்து தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு நவ.7ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை நிறுத்துவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தன. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையான ஆம்னி பேருந்துகளை இயக்கத்தையும் நிறுத்துவதாக தமிழக அனைத்து ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

    இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் திடீரென சிறைபிடிக்கப்பட்டது. இதேபோன்று கடந்த ஏழு நாட்களாக கர்நாடகா போக்குவரத்து துறையும் தமிழக பதிவு எண் கொண்ட 60க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை நிறுத்தியுள்ளனர். மேலும், ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதிக்கின்றனர். மொத்தம் ரூ.1.15 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ’ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மீட்டின்படி’ தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள். எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என அண்டை மாநிலங்கள் காரணம் தெரிவிக்கிறார்கள். இந்த திடீர் நடவடிக்கையால் ஆபரேட்டர்கள் வரியும், அபராதங்களும் என இரண்டையும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம்.

    ஏற்கனவே தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையேயான பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் தமிழக பயணிகள் பெரும் பாதிப்பை எதிர்க் கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையே இயக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு (90 நாட்கள்) தமிழக சாலை வரி ரூ.1,50,000. AITP சாலை வரி ரூ.90,000 மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக ரூ.2 லட்சம் ஆக மொத்தம் காலாண்டுக்கு ரூ.4,50,000 செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்தப் பிரச்சினையில் நவ.10 மாலை 5 மணி முதல் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியில் உள்ள மாநிலங்களுக்கு இடையான ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து சங்கங்களும் ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்தியாவின் எல்லா விஷயங்களிலும் முன்னோடியாக செயல்படும் தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வர் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா உடன் பேசி அந்த மாநில பேருந்துகளுக்கும் சாலை வரியில் விலக்களித்து அண்டை மாநிலங்களுக்கு சீராகப் பேருந்துகள் இயக்க வழி வகையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அதில் தெரிவித்துள்ளனர்.

    omnibus#stopped
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு
    Next Article நயினார் நாகேந்திரன் கூட்டத்துக்கு திரண்டு வந்த அதிமுகவினர்: இரு கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகம்
    Editor TN Talks

    Related Posts

    விபத்து நடந்த உடனேயே ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்ய கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

    December 30, 2025

    ஒரே முகவரியில் 211 வாக்காளர்கள்: மதுரை ஆட்சியரிடம் பாஜக புகார் மனு

    December 30, 2025

    அதிமுக அடிமை கட்சி தான்!. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!.

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமைதிப் பேச்சுவார்த்தையில் நெருங்கி வரும் உக்ரைன், ரஷ்யா: ட்ரம்ப் தகவல்

    விபத்து நடந்த உடனேயே ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்ய கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

    மெல்போர்ன் டெஸ்ட் ஒரு கேலிக்கூத்து என்பது பிட்சினால் அல்ல பேட்டர்களினால் – இயன் சாப்பல் சாடல்

    தேதி குறிச்சாச்சு!. ரஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டாவுக்கு டும் டும் டும்!.

    ஒரே முகவரியில் 211 வாக்காளர்கள்: மதுரை ஆட்சியரிடம் பாஜக புகார் மனு

    Trending Posts

    அமைதிப் பேச்சுவார்த்தையில் நெருங்கி வரும் உக்ரைன், ரஷ்யா: ட்ரம்ப் தகவல்

    December 30, 2025

    தேதி குறிச்சாச்சு!. ரஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டாவுக்கு டும் டும் டும்!.

    December 30, 2025

    கவுதம் காம்பீர் நீக்கமா? பிசிசிஐ சொன்ன பதில் இதுதான்

    December 28, 2025

    விபத்து நடந்த உடனேயே ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்ய கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

    December 30, 2025

    மெல்போர்ன் டெஸ்ட் ஒரு கேலிக்கூத்து என்பது பிட்சினால் அல்ல பேட்டர்களினால் – இயன் சாப்பல் சாடல்

    December 30, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.