மார்வெல் சினிமேடிக் யுனிவர்ஸ் வரிசையில் 2018 ஆம் ஆண்டு பிளாக் பேந்தர் திரைப்படம் வெளியானது. சாட்விக் போஸ்மேன் நடிப்பில் வெளியான திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி சுமார் ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூல் சாதனை செய்தது. பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்த கதையின் நாயகன் சாட்விக் அதன் பின்னர் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் இயற்கை எய்தியது நம் அனைவரும் அறிந்த செய்தி. பிளாக் பேந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தின் தங்கை சூரி கதாபாத்திரத்தில் நடித்த லெட்டிட்டா ரைட் இரண்டாம் பாகத்தின் கதையின் நாயகனாக நடித்தார். வகாண்டா ஃபார்எவர் என்கிற தலைப்பில் அத்திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படமும் முதல் பாகத்தைப் போன்று நல்ல வரவேற்பையும் சுமார் 800 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்தது.
இந்த இரண்டு திரைப்படத்தையும் இயற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் ரியான் கூகுலர் ஆவார். சமீபத்தில் சின்னரர்ஸ் (காட்டேரிகள் சம்பந்தமான திரைப்படம் ) என்கிற திரைப்படத்தை இயற்றி உலக அளவில் மிகப்பெரிய நல்ல பெயரையும், உலக அளவில் சர்வதேச விருதுகளையும் அவர் பெற்று வருகிறார்.
இந்நிலையில் பிளாக் பேந்தர் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் எப்பொழுது வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து நிலையில், ரியான் கூகுலர் தானே பிளாக் பேந்தர் திரை படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்க போவதாக உறுதி கூறியுள்ளார். சமூகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதை சூசகமாகக் ஒப்பு கொண்டது குறிப்பிடத்தக்கது.
https://x.com/DEADLINE/status/1989801311483957380?t=bwtdoOXGgpAo4PtItGve5g&s=19
கடந்த நவம்பர் 2024 ஆம் ஆண்டு புகழ்பெற்ற நடிகர் டென்ஷெல் வாஷிங்டன், “ரியான் கூகுளர் எனக்காக ஒரு கதாபாத்திரத்தை எழுதி வருகிறார்” என்று கூறியிருந்தார். தற்பொழுது நாம் இவர்கள் இருவரும் கூறியதை ஒப்பிட்டுப் பார்க்கையில், டென்ஷெல் வாஷிங்டன் நிச்சயமாக பிளாக் பந்தர் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தை ஏற்கப் போகிறார் என தெரிய வருகிறது.

