கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ( நவம்பர் 15, 2025 ) எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வரும் புதிய திரைப்படத்தின் பெயர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இத்திரைப்படத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுமார் 27 கோடி ரூபாய் பொருட்செலவில் பெயர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக ராமஜிராவோ ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. படத்திற்கு வாரணாசி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வாரணாசி என்கிற படத்தலைப்பை 3 நிமிடம் 41 நொடி அடங்கிய வீடியோ மூலம் 130 அடி உயர எல்ஈடி திரையில் படக்குழு திரையிட்டது.
பட தலைப்பின் வீடியோவை வெளியிடுவதற்கு முன்பாக சிறு தொழில்நுட்பப் பிழை ஏற்பட்டதன் வாயிலாக காலதாமதம் நடந்தது. இதனால் சற்று விரக்தியில் எஸ்எஸ் ராஜமௌலி மேடையில் ஏறி பட தலைப்பின் வீடியோவை காண காத்திருந்த அனைத்து ரசிகர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்டார்.
அப்பொழுது அவர் பேசியது, “ எனக்கு கடவுள் மீது அவ்வளவு பெரிய நம்பிக்கை இல்லை. எனது அப்பா விஜயேந்திர பிரசாத் என்னிடம் வந்து கடவுள் ஹனுமான் உன்னுடன் எப்பொழுதும் உன்னுடன் இருப்பார். எப்பொழுதும் உன்னை சரியாக வழி நடத்துவார் என்று கூறியிருந்தார். தற்பொழுது நடந்து தொழில்நுட்ப பிழைக்கு பின்னர் எனக்கு இதைச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. ஹனுமான் இப்படி தான் என்னை வழி நடத்துவாரா?. மேலும் எனது மனைவி மிகப்பெரிய ஹனுமான் பக்தை. என் மனைவி கடவுளிடம் சக நண்பரிடம் பேசுவதைப் போல் பேசுவார். என் மனைவியை பார்த்து கோபத்தில், ஹனுமான் இப்படித்தான் செய்வாரா என்று கேட்டு விட்டேன்” இவ்வாறு எஸ் எஸ் ராஜமௌலி பொது மேடையில் கூறியுள்ளார்.
எஸ் எஸ் ராஜமௌலி பொது மேடையில் கடவுள் ஹனுமான் பற்றி இவ்வாறு பேசியது மிக கண்டனத்திற்குரியது என்று ராஷ்டிரிய வனர சேனா அமைப்பு எஸ் எஸ் ராஜமௌலி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
