இன்று இந்தியா மற்றும் உலக அளவில் பேஸ்புக், x ( முன்னாள் ட்விட்டர் செயலி ), சேட் ஜி பி டி, டெலிகிராம் மற்றும் பல்வேறு வலைதளங்கள் சரியாக செயல்படாமல் முடங்கி போய் உள்ளது.மேற்கூறிய செயலி மற்றும் வலைதளங்களின் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய கணக்கை சரியாகப் பயன்படுத்த முடியவில்லை என்று குற்றச்சாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது சம்பந்தமாக ஆராய்ந்து பார்க்கையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான க்ளவுட் ஃபேர் நிறுவனம் கிராஷ் ஆனதால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கிளவுட் ஃபேர் நிறுவனம் உள்ளடக்க விநியோக வலையமைப்பு செய்வதில் தேர்ந்த நிறுவனம். அதாவது செயலிகள் மற்றும் வலைதளங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு இணைய உள்ளடக்கத்தை (படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகளை ) விரைவாகவும் திறமையாகவும் வழங்க உதவுகிறது. அதுமட்டுமின்றி கிளவுட் ஃபேர் நிறுவனம் சைபர் செக்யூரிட்டி சேவையிலும் கை தேர்ந்த நிறுவனம்.
இன்று பல்வேறு செயலிகள் மற்றும் வலைதளங்கள் முடங்கிப் போனதற்கு முக்கிய காரணம் கிளவுட் ஃபேர் நிறுவனத்தின் சர்வரில் நடந்த சைபர் அட்டாக் தான் என்று தகவல் கசிந்து உள்ளது. இருப்பினும் அந்நிறுவனம் இதுகுறித்து முழுமையான அறிக்கையை எதுவும் வெளியிடவில்லை. கூடிய விரைவில் நடந்து வரும் இந்த பதற்றத்தை தணிக்க, புதிய அப்டேட்டை அந்த நிறுவனம் வெளியிடும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
ஜனவரி 2025 நிலவரப்படி, இணையத்தில் உள்ள அனைத்து வலைத்தளங்களிலும் சுமார் 19.3% பயனீட்டாளர்கள் கிளவுட் ஃபேரை அதன் வலை பாதுகாப்பு சேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
