மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் துபாய் விமான கண்காட்சி கடந்த நவம்பர் 17 தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விமான கண்காட்சி 17 தொடங்கி வருகிற 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விமான கண்காட்சியில் உலக அளவில் இருந்து பல்வேறு முக்கிய முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தியா தரப்பில் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட், டி.ஆர்.டி.ஓ, கோரல் டெக்னாலஜீஸ், டேண்டல் ஹைட்ராலிக்ஸ், இமேஜ் சினர்ஜி எக்ஸ்புளோரர், எஸ்.எப்.ஓ டெக்னாலஜீஸ் ஆகிய முக்கிய நிறுவனங்கள் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் விமான கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் ரஷ்யாவை சேர்ந்த போர் விமானமான SU-57E ஈர்த்துள்ளது. தற்பொழுது அந்த SU-57E போர் விமானத்தை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்க முன் வந்துள்ளது. ஆம், வருகிற டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புது டெல்லிக்கு வர இருக்கிறார். விளாடிமிர் புதினின் வருகைக்கு முன்னதாகவே, ரஷ்யா இந்தியாவிற்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் முன்னர் கூறப்பட்ட முதன்மையான ஸ்டெல்த் போர் விமானமான சுகோய் Su‑5 இன் பெற்ற உற்பத்தி செய்யக்கூடிய முழுமையான உரிமம் தான்.

இந்த ஒப்பந்தத்தில் முழு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் இந்திய விமானப்படையின் தேவைகளுக்கு ஏற்ப இரண்டு இருக்கைகள் கொண்ட மாறுபாட்ட கூட்டு வளர்ச்சி ஆகியவை அடங்கும்.ரஷ்ய தரப்பின் கூற்றுப்படி, ‘இயந்திரங்கள், ஒளியியல், AESA ரேடார், AI கூறுகள், குறைந்த கையொப்ப தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன விமான ஆயுதங்கள் உள்ளிட்ட 5 வது தலைமுறை தொழில்நுட்பங்களின் தொழில்நுட்ப கற்றலை ரஷ்யா முழு உரிமைத்துடன் வழங்க தயாராக உள்ளதாக தெரிய வருகிறது.

குறைந்த எரிவாயு சக்தி உபயோகம், ஏஐ தொழில்நுட்பம் கொண்ட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம், எதிரிகள் நீண்ட நேரம் கண்காணிக்காமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போர் விமானம், சக்தி வாய்ந்த AESA ரேடார், IR சென்சர்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த போர் விமானத்தின் உற்பத்தி செய்யும் வாய்ப்பை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
