தமிழில் ஜி.வி பிரகாஷ் உடன் பேச்சுலர் திரைப்படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்த திவ்யபாரதி தற்பொழுது தெலுங்கு திரையுலகில் கோட் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் இயக்குனராக நரேஷ் குப்பிலி முதலில் நியமனம் செய்யப்பட்டார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நரேஷ் குப்பிலி இந்த திரைப்படத்திலிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளார். திரைப்படத்தின் தயாரிப்பாளரே மீதமுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிப்பதாக முடிவு எடுத்துள்ளார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தை இயக்க முதலில் ஒப்பந்தமான நரேஷ் குப்பிலி தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு சில பதிவுகளை பதிவு செய்து வருகிறார். அதில் படத்தின் கதாநாயகி திவ்யா பாரதியை கிண்டல் செய்யும் நோக்கில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கதாநாயகி திவ்யா பாரதியை சில்லாக்கா என்று குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு வட்டார வழக்கில் சில்லாக்கா என்பது பறவையை குறிக்கும் அது மட்டுமின்றி இரண்டாம் கட்ட கதாநாயகி செய்ய வேண்டிய வேலையை இந்தக் கிலியோட( சில்லாக்கா என்று அவர் குறிப்பிட்டது ) விட்டுட்டீங்க என்று கிண்டலாக அவர் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நடிகை திவ்யா பாரதி தனது கண்டனத்தை பதில் பதிவின் மூலம் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ பெண்களை “சில்லாக்கா” அல்லது வேறு எந்த வார்த்தையாலும் அழைப்பது நகைச்சுவை அல்ல, அது ஆழமாக வேரூன்றிய பெண் வெறுப்பின் பிரதிபலிப்பாகும். இது ஒரு முறை மட்டுமே நடந்த சம்பவம் அல்ல, இந்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்திலும் அதே முறையை தான் பின்பற்றினார். பெண்களை மீண்டும் மீண்டும் அவமதித்துள்ளார். இவ்வளவு விஷயம் நடந்து கொண்டிருக்கையில் படத்தின் கதாநாயகன் அமைதி காப்பது தான் எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
நான் சிறந்ததை தேர்வு செய்கிறேன்
பெண்கள் கேலிக்கு ஆளாகாத பணியிடங்களை தேர்வு செய்கிறேன், ஒவ்வொரு குரலும் முக்கியம்.
மரியாதை குறித்து பேரம் பேச முடியாத இடங்களை நான் தேர்வு செய்கிறேன்.
இது வெறும் தேர்வு அல்ல, ஒரு கலைஞராகவும் ஒரு பெண்ணாகவும் இது எனது தரநிலை”, இவ்வாறு திவ்யா பாரதி தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
திவ்யா பாரதியின் இந்த பதிவுக்கு கீழ் ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
