நவம்பர் 21, 2025 : சற்று நேரத்திற்கு முன்பு மத்திய அரசு 4 புதிய தொழிலாளர் குறியீடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது வந்த நான்கு புதிய நான்கு குறியீடுகள் இந்தியாவில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த 29 தொழிலாளர் சட்டங்களை எளிமையாகவும், வெளிப்படையாகவும் அதே நேரத்தில் எதிர்காலத்துக்கு ஏற்ற கட்டமைப்பை இணைத்து ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவான அதிகாரத்தை கொடுத்து, எதிர்கால பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

புதிய நான்கு தொழிலாளர் குறியீடுகளை எடுத்துக்கூறும் வகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில்,
“ ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவில், இந்திய அரசு நான்கு தொழிலாளர் குறியீடுகளான – ஊதியக் குறியீடு,2019 , தொழில்துறை உறவுகள் குறியீடு,2020 , சமூகப் பாதுகாப்பு குறியீடு,2020 மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு,2020 ஆகியவை நவம்பர் 21, 2025 முதல் அமலுக்கு கொண்டு வருகின்றது . இது தற்போதுள்ள 29 தொழிலாளர் சட்டங்களை பகுத்தறிவு செய்யும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளது.
தொழிலாளர் விதிமுறைகளை நவீனமயமாக்குவதன் மூலமும், தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவதன் மூலமும், வளர்ந்து வரும் வேலை உலகத்துடன் தொழிலாளர் சுற்றுச்சூழல் அமைப்பை இணைப்பதன் மூலமும், இந்த நடவடிக்கையானது எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர்கள் மற்றும் ஆத்மநிர்பர் பாரதத்திற்கான தொழிலாளர் சீர்திருத்தங்களை இயக்கும் வலுவான, மீள்தன்மை கொண்ட தொழில்களுக்கும் அடித்தளத்தை அமைக்க போகிறது.
இந்தியாவின் பல தொழிலாளர் சட்டங்கள் சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய சகாப்தத்தில் (1930கள்-1950கள்) உருவாக்கப்பட்டன. அந்த நேரத்தில் பொருளாதாரமும் வேலை உலகமும் அடிப்படையில் வேறுபட்டு இருந்தன. பெரும்பாலான பெரிய பொருளாதாரங்கள் சமீபத்திய தசாப்தங்களில் தங்கள் தொழிலாளர் விதிமுறைகளைப் புதுப்பித்து ஒருங்கிணைத்திருந்தாலும், இந்தியா பழைய 29 மத்திய தொழிலாளர் சட்டங்களுக்கு கீழ் சிக்கலான மற்றும் பல பகுதிகளில் காலாவதியான விதிகளின் கீழ் தொடர்ந்து இயங்கி வந்தது.
தற்பொழுது இந்த புதிய நான்கு தொழிலாளர் குறியீடுகளை அமல்படுத்துவதன் மூலமாக, நவீன உலகளாவிய போக்குகளுடன் ஒத்துப்போக வேண்டிய நீண்டகால தேவையை இந்த நான்கு புதிய குறியீடுகள் நிவர்த்தி செய்கின்றன. மேலும் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டையும் மேம்படுத்த புதிய குறியீடுகள் உதவும். அதேசமயம் வளர்ந்து வரும் வேலை உலகத்துடன் இணைந்து செயல்படும் அளவுக்கு பாதுகாப்பான ஒரு புதிய தொழில் சூழலை இந்தக் குறியீடுகள் வழிவகுக்கும். இது மிகவும் நெகிழ்ச்சியான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் சுயசார்பு கொண்ட தேசத்திற்கு வழி வகுக்கவும் உதவும்”.
மத்திய அரசால் அமலுக்கு கொண்டுவந்துள்ள புதிய நான்கு குறியீடுகளுக்கு கீழ் :
- சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020 இன் கீழ், தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டைப் பெறுவார்கள்.
- அனைத்து தொழிலாளர்களும் PF, ESIC, காப்பீடு மற்றும் பிற சமூகப் பாதுகாப்பு சலுகைகளைப் பெறுவார்கள்.
- அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய நியமன கடிதம்.
- 2019 ஆம் ஆண்டு ஊதியக் குறியீட்டின் கீழ், அனைத்து தொழிலாளர்களும் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும். அதன் கீழ் குறைந்தபட்ச ஊதியமும், சரியான நேரத்தில் தகுந்த கட்டணம் பெறுவதன் மூலம், தொழிலாளர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

- 40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட முதலாளிகள் இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனையை வழங்க வேண்டும்.

- தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தகுந்த தடுப்பு சுகாதார சூழலை உறுதிப்படுத்தும்.
- முதலாளிகள் தொழிலாளிகளுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவது கட்டாயமாக்கப்படும்.

- நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், பணி அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த மன உறுதியை அதிகப்படுத்தும்.
- பெண்களின் சம்மதத்துக்கு உட்பட்டு, அவர்கள் விருப்பப்பட்டால் இரவு நேரங்களிலும் அனைத்து நிறுவனங்களிலும் அனைத்து வகையான வேலைகளிலும் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும். இரவு நேரங்களில் அவர்கள் மேலும் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்படும்.

- அதிக ஊதியம் கிடைக்கும் வேலைகளில், ஆண்களைப் போல பெண்களும் அதிக வருமானம் ஈட்ட சம வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
- ESIC பாதுகாப்பு மற்றும் சலுகைகள் இந்தியா முழுவதும் நீட்டிக்கப்படும்.
- இந்தியா முழுவதும் இனி ஒற்றைப் பதிவு ( single registration), PAN-இந்தியா ஒற்றை உரிமம் ( பண் india single licence) மற்றும் ஒற்றை வருமானம் ( Single income).
- எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகள் கொண்டு வருவதன் மூலம் இணக்கச் சுமையும் குறைக்கப்படும் .
