2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய வீரர்கள் மற்றும் சைனா வீரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். அதே சமயம் சைனா வீரர்களும் ( எண்ணிக்கை சரியாக தெரியவில்லை ) கொல்லப்பட்டனர். இந்த சலசலப்பில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்திய அரசு ஒரு அதிரடி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் சீன குடிமக்களுக்கான பெரும்பாலான விசா சேவைகளை இந்தியா நிறுத்தியது.
வணிக மற்றும் மாணவர் விசாக்கள் மீண்டும் பகுதிகளாகத் தொடங்கப்பட்டாலும், சுற்றுலா வரம்பற்றதாகவே இருந்தது. ஆண்டுதோறும் இந்தியாவிற்கு 2.5 லட்சத்திற்கும் அதிகமான சீன பார்வையாளர்கள் வந்து சென்று கொண்டிருந்த நிலையில், இந்தியா எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் நிறைய சீன மக்கள் இந்தியாவுக்கு வர முடியாமல் போனது.
இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து விசா கட்டுப்பாட்டை இந்திய அரசு இன்று போக்கியுள்ளது. அதன் அடிப்படையில் இனி சீன மக்கள் முன்பு போல இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். இந்தியாவுக்கு வர முறையான விசாவை சீன மக்கள் பெற வேண்டும். அதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து பின்னர், இது சம்பந்தமான சந்திப்புக்கு முன்பதிவு செய்ய வேண்டும். சந்திப்பில் முறையான பத்திரங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு வர முறையான விசா வழங்கப்படும்.

இந்தியா சமரசத்துடன் போனதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற நடந்த சந்திப்புதான். ஆம் கடந்த ஆண்டு ரஷ்யாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சைனா அதிபர் Xi ஜின்பிங் சந்தித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சைனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ இந்தியாவுக்கு வந்து இரு நாட்டு உறவை மேம்படுத்து விதத்தில் பிரதமர் மோடியுடன் நிறைய முறை சந்திப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
