சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.
அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் இந்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில், சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே மற்றும் நிவேதித் ஆல்வா மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
