யாருமே எதிர்பாக்காத வகையில் இந்திய மக்களுக்கு தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் NCRTC (National Capital Region Transport Corporation) ஒரு சேவையை அமலுக்கு கொண்டுவந்துள்ளது. அதன் அடிப்படையில் நமோ பாரத் ரயில் நிலையங்களிலும் நமோ பாரத் ரயில்களிலும் பிறந்தநாள் கொண்டாட்ட விழா, திருமணத்திற்கு முன்பாக மற்றும் பின்பாக எடுக்கப்படும் போட்டோ சூட் நிகழ்வு, இதை மட்டுமன்றி தனிப்பட்ட நிகழ்வுகளையும் நடத்திக் கொள்ளலாம்.

இதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். NCRTC வெப்சைட்டில் சென்று மக்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம். நமோ பாரத் ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் நிகழ்வுகளை நடத்த ஒரு மணி நேரத்திற்கு 5000 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பும் பின்பும் 30 நிமிடங்கள் கூடுதல் கால அவகாசமாக ( நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டிற்காகவும் மற்றும் நிகழ்வு முடிந்த பின்னர் புறப்பாட்டிற்காக ) கொடுக்கப்படும்.

இந்த நிகழ்வுகள் நடத்தும் வேளையில் அலங்காரம் மற்றும் பாதுகாப்புக்கான விதிமுறைகளை NCRTC வழங்கும் அதை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். முக்கியமாக பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காத வகையில் இந்த நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்பது முக்கிய விதிமுறையாகும். அதேபோல நிகழ்வுகள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
