1935 ஆம் ஆண்டு டிசம்பர் எட்டாம் தேதி பிறந்தவர்தான் நடிகர் தர்மேந்திரா தியோல் ( முழு பெயர் : தர்மேந்திர கேவல் கிருஷண் தியோல்). 65 வருட திரைத்துறை பயணத்தில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி துறையில் அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர்கள் மத்தியில் இவரும் ஒருவர். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக இவர் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

நடிப்பு தயாரிப்பு தாண்டி அவர் ஒரு காலத்தில் மக்களவையில் ( லோக் சபா ) நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார் ( 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை ). மேலும் 2012 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதினை பெற்றார்.

பிரகாஷ் கவுர் மற்றும் பிரபல நடிகை ஹேமமாலினி இவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மொத்தம் 4 குழந்தைகள். அதில் குறிப்பாக சன்னி தியோல், பாபி தியோல் மற்றும் ஈஷா தியோல் ஹிந்தித் திரைப்படத்துறையில் நடிகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அழகுக்கும் வசீகரத்துக்கும் சொந்தமான அனைவராலும் கவரப்பட்ட லெஜெண்டரி நடிகரான அவர் இன்று தன்னுடைய 89 ஆவது வயதில் இயற்கை எய்தினார். இந்திய சினிமா மிகவும் விரும்பப்படும் தலைசிறந்த நடிகர்களில், ஒருவரை இன்று இழந்துவிட்டது. அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

