அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை தங்கள் கட்சியில் சேர்க்க திமுக, பாஜக, தவெக ஆகியவை ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி, அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை இபிஎஸ் நீக்கினார். இதையடுத்து பாஜக மேலிடத் தலைவர்களை அவர் அடுத்தடுத்து சந்தித்தார். இதனால் பாஜகவில் அவர் இணையக்கூடும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வந்த செங்கோட்டையனை திமுக அமைச்சர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். இதனால் திமுக தரப்பிலும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல், மறுபக்கத்தில் விஜய்யின் தவெக கட்சி தரப்பிலும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. இதனால் 3 கட்சிகள் தரப்பிலும் செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் செங்கோட்டையன், திமுகவில் இணைவாரா அல்லது பாஜக அல்லது தவெகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
