இந்திய மட்டும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று ராஞ்சியில் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தினார். அவருக்கு அடுத்தபடியாக அணியின் கேப்டன் கே எல் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.
ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் ஷர்மா இன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷாஹித் அப்ரீடியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியல் :
352 – ரோஹித் ஷர்மா
351 – ஷாஹித் அப்ரிடி
331 – கிறிஸ் கெய்ல்
270 – சனத் ஜெயசூர்யா
229 – எம்எஸ் தோனி
220 – ஈயோன் மோர்கன்
204 – ஏபி டிவில்லியர்ஸ்

இதனைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும், ஒரு நாள் போட்டியிலும் டி20 கிரிக்கெட் போட்டியில் இவற்றுக்கு மேலாக உலகக்கோப்பை தொடரிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக ரோஹித் ஷர்மா இன்று முதல் அழைக்கப்படுவார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் – ரோஹித் ஷர்மா
ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் – ரோஹித் ஷர்மா
டி20 போட்டியில் அதிக சிக்சர் – ரோஹித் ஷர்மா
உலகக் கோப்பையில் அதிக சிக்சர் – ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து இப்போட்டியில் விளையாடிய விராட் கோலி தன்னுடைய 83 வது சர்வதேச சதத்தை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் (51) இருக்கையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரராக விராட் கோலி(52*) காணப்படுகிறார்.

முதலிடத்தில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
