2026ம் ஆண்டில் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது.
இந்தநிலையில், TNPSC இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், 2026ம் ஆண்டிற்கான தேர்வு திட்டம் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டு நடைபெற உள்ள குரூப் 4 தேர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வின் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அறிவிக்கையில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு ஜூன் 23ம் தேதி வெளியாகும் என்றும் குரூப் 1 தேர்வு செப்டம்பர் 6ம் தேதி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு அக்டோபர் 6ம் தேதி வெளியாகும் என்றும் குரூர் 4 தேர்வு டிசம்பர் 20ம் தேதி நடைபெறும் என்றும் TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 25ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
