தமிழ் திரைப்படத் துறையில் அதிக வருமானம் பெறும் நடிகர்களாக பார்க்கப்படுவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர்தான். இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்திற்கு 200 முதல் 250 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் திரையுலகில் அதிக வருமானம் பெறும் நடிகர்கள் பற்றி தெரிந்து நமக்கு உலக அளவில் அதிக வருமானம் பெறும் நடிகர்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த கட்டுரையில் உலக அளவில் அதிக வருமானம் பெறும் நடிகர்கள் பற்றி பார்ப்போம்.
கீழே நீங்கள் பார்க்கப் போகிற நடிகர்கள் அனைவரும் கடந்த ஆண்டு மட்டும் எவ்வளவு வருமானம் பெற்றார்கள் என்று பார்க்கப் போகிறீர்கள். குறிப்பாக நீங்கள் பார்க்கப் போகும் தொகை அனைத்தும் வருமான வரி மற்றும் இதர செலவுகள் போக அவர்களுடைய கைக்குச் சென்ற முழு வருமானத்தை தான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.
உலக அளவில் அதிக வருமானம் ஈட்டிய நடிகர்கள் 2024 ஆம் ஆண்டில் :
1. ட்வைன் “தி ராக்” ஜான்ஸன் (Dwayne Johnson)

வருமானம்: $ 88 மில்லியன் → சுமார் ₹ 730 கோடி
2.ரயன் ரெனால்ட்ஸ் (Ryan Reynolds)

வருமானம்: $ 85 மில்லியன் → சுமார் ₹ 706 கோடி
3.கெவின் ஹார்ட் (Kevin Hart)

வருமானம்: $ 81 மில்லியன் → சுமார் ₹ 672 கோடி
4.ஜெரி சீன்ஃபெல்டு (Jerry Seinfeld)

வருமானம்: $ 60 மில்லியன் → சுமார் ₹ 498 கோடி
5.ஹ்யூ ஜாக்மேன் (Hugh Jackman)

வருமானம்: $ 50 மில்லியன் → சுமார் ₹ 415 கோடி
6.பிராட் பிட் (Brad Pitt)

வருமானம்: $ 32 மில்லியன் → சுமார் ₹266 கோடி
7.ஜார்ஜ் கிளூனி (George Clooney)

வருமானம்: $ 31 மில்லியன் → சுமார் ₹ 257 கோடி
8.நிக்கோல் கிட்மன் (Nicole Kidman)
வருமானம்: $ 31 மில்லியன் → சுமார் ₹ 257 கோடி
9.ஆடம் சந்த்லர் (Adam Sandler)

வருமானம்: $ 26 மில்லியன் → சுமார் ₹ 216 கோடி
10.வில் ஸ்மித் (Will Smith)

வருமானம் : $ 26 மில்லியன் → சுமார் ₹ 216 கோடி
நீங்கள் மேலே பார்க்கும் இந்திய ரூபாய் மதிப்பு கடந்த ஆண்டு அவர்கள் பெற்ற டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பான 83 ரூபாய்க்கு. கடந்த ஆண்டு அதிக வருவாய் ஈட்டிய நடிகர்களின் இந்த வரிசை பட்டியலில் இந்த ஆண்டு முடிவில் ஏதேனும் மாற்றம் நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
