‘எஸ்கே 26’ படம் தொடர்பாக வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.
சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் கூட்டணி அடுத்த இணைய உள்ளது. அந்த வகையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘எஸ்கே 26’ படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனின் தோற்றம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றிய பேசிய வெங்கர் பிரபுவும், சிவகார்த்திகேயன் உடனான திரைப்படம் நிச்சயம் வித்தியாசமான நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். கதையைக் கேட்ட தயாரிப்பு நிறுவனமும், சிவகார்த்திகேயனும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதுவரை பார்க்காத எஸ்கே-வை இந்தப் படத்தில் நிச்சயமாக பார்க்கலாம் என்றும் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.
இந்தநிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட்பிரபு இருவரும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப பணிகளுக்காக அமெரிக்காவுக்கு பயணித்திருப்பதற்கான அறிவிப்பாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
