சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றி சதவீதம் கொண்ட டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் திகழ்கிறார்.
2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் தனது முதல் பெரிய கோப்பையை வென்ற பிறகு, சூர்யகுமார் யாதவ், தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரையும் 2-1 என ஜெயித்து அதிரடி காட்டினார். அதற்கு முன், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து T20I போட்டிகளில் 4-1 என தொடர் வெற்றி பெற்றது. இப்போது, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் T20 போட்டியிலும் 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் இலங்கை அணியை 3-0 என வீழ்த்தி, சுர்யகுமார் யாதவ் தனது அதிகாரப்பூர்வ T20I கேப்டன்சி பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். குறுகிய வடிவ கிரிக்கெட்டில் சூர்யகுமார் காட்டி வரும் ஆட்டம் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணியை மூன்று T20 தொடர்களில் கேப்டனாக வழிநடத்தி வெற்றி பெற்றுள்ளார். இது அவரின் சிறப்பான சாதனையை வெளிப்படுத்துகிறது.
சூர்யகுமார் யாதவ் டி20 கேப்டன் பதவி சாதனை: 360-டிகிரி ஷாட்களுக்காக பெயர் பெற்ற சுர்யகுமார் யாதவ், இதுவரை இந்திய அணிக்காக கேப்டனாக செயல்பட்டது T20 வடிவில் மட்டுமே. தொடக்கத்தில் அவர் நிரந்தர கேப்டனாக இல்லை; வழக்கமான கேப்டனான ஹர்திக் பாண்ட்யா கிடைக்காத நிலையில், அந்த இடத்தை நிரப்ப இடைக்கால கேப்டனாக பொறுப்பேற்றார்.
2023 உலகக் கோப்பைக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவை வழிநடத்தி, உலகக் கோப்பை தோல்விக்கு பழிவாங்கும் விதமாக 4-1 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றார். இதுவரை, அவர் தலைமையில் 35 போட்டிகளில் 26 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது, இரண்டு போட்டிகள் டையில் முடிவடைந்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. சூர்யகுமார் தலைமையில், இந்தியா ஐந்து போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. இந்த பட்டியலில் 80 சதவீதத்துடன் முதலிடத்தில் சூர்யகுமார் யாதவ் உள்ளார். 79.83% உடன் ரோஹித் ஷர்மா 2வது இடத்திலும், கோலி 64.58% உடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.
ஐபிஎல் கேப்டன்சியில் சூரியகுமார் யாதவின் சாதனை: இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்), சூர்யா ரோஹித் சர்மாவின் தலைமையில் விளையாடியுள்ளார், இப்போது அவர் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் விளையாடுவார். வலது கை பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் இரண்டு போட்டிகளில் மட்டுமே கேப்டனாக பணியாற்றியுள்ளார்.
ரஞ்சி கோப்பை கேப்டன்: ரஞ்சி கோப்பையில் சூர்யாகுமார் யாதவ் தனது உள்ளூர் அணியான மும்பை அணியையும் வழிநடத்தியுள்ளார், ஆறு போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ளார், அவர் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார், மூன்று போட்டிகள் டிராவில் முடிந்தன.
சூரியகுமார் யாதவ் உள்ளூர் கிரிக்கெட்டில் டி20 வடிவத்தில் முன்னிலை வகித்த அனுபவம் கொண்டவர். அவர் மும்பை அணிக்கு 16 ஆட்டங்களில் கேப்டனாக இருந்து 62.5 வெற்றி சதவீதத்தை எட்டியுள்ளார்.
