சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு அடுத்த மாதம் 10ம் வரை முன்பதிவு நிறைவடைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. சுவாமி தரிசனத்துக்கு கடந்த ஆண்டுகளைப் போலவே ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. அதன்படி, துவக்கத்தில் தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், உடனடி தரிசன முன்பதிவு மூலம் 20 பக்தர்களும் அனுமதி பெற்றனர்.
இந்தாண்டும் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரிக்கத் தொடங்கின. இதனையடுத்து, உடனடி தரிசன பதிவை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில், மண்டல பூஜைக்கு பிறகு நடைபெற உள்ள மகர விளக்கு பூஜைக்கான முன்பதிவும் தற்போது நடந்து வருகிறது. அதன்படி, ஜனவரி 10ம் தேதி வரை முன்பதிவு முடிவடைந்துள்ளது.
விழாவின் மற்றொரு சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் நிகழ்வு ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
