அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப்க்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் தோல்வி அடைந்தது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அல் கிரீன், அதிபர் டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதற்கு தீர்மானத்திற்கு 47 ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். தீர்மானத்துக்கு எதிராக 140 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால், அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டில் அதிபர் டிரம்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டாவது பதவி நீக்க தீர்மானமாகும். பாதுகாப்பான சூழல், வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிபர் டிரம்பின் கொள்கை தோல்வி அடைந்ததாக விமர்சித்து நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
